எஸ் வங்கி மோசடியில் சிக்கும் காங்கிரஸ்! மாட்டிவிட்ட ராஜீவ் காந்தி ஓவியம் !

பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் எஸ் வங்கி நிதி மோசடி. சுமார் 600 கோடி மோசடி செய்துள்ளதாக அதன் நிறுவனர் ராணா கபூர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் 49% பங்குகளை ஸ்டேட் SBI வங்கி நிர்வகிக்கும் என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இந்த விசாரணையில், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் ஓவியத்தை பிரியங்கா காந்தியிடம் இருந்து ராணா கபூர் ரூ.2 கோடிக்கு வாங்கியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த 2 கோடி ரூபாயில் பிரியங்கா காந்தி ஷிம்லாவில் ஒருதாங்கும் விடுதி வாங்க செலவிட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது .

பிரியங்கா காந்தி ஓவியத்தை ரூ.2 கோடிக்கு விற்பனை செய்தது தொடர்பாக பிரியங்கா மற்றும் ராணா கபூர் இருவரும் பரிமாறிய கடிதங்கள் மற்றும் காசோலைகளும் கிடைதுள்ளது.

இது எதற்காக 2 கோடி ரூபாய் கொடுத்து ஓவியத்தை வாங்க வேண்டும் அந்த பணம் ஏன் பிரியங்கா காந்திக்கு சென்றது ஏன் என பல கேள்விகள் முன் வைக்கின்றன. இது பணமோசடி வழக்காகப் பதிவு செய்யப்பட்டு அமலாக்கத் துறையால் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என அந்த பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்த ஓவியத்தை விற்பனை செய்ததில், பிரியங்காவுக்கு உதவிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. மிலிந்த் தியோராவிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Exit mobile version