தமிழகத்தில் கொரோன கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. திமுக ஆட்சி பொறுப்பில் முதல் 2 வாரம் ஊரடங்கு போட்டும் பயனில்லை.பின்னர் மேலும் ஓரு வாரம் தளர்வுகளற்ற ஊரடங்கு போடப்பட்டது பின் தளர்வுகள் உடைய ஊரடங்கு போடப்பட்டு வருகிறது. இன்னும் தமிழகம் ஊரடங்கில் தான் உள்ளது.
ஏனென்றால் கொரோனாவை கையாளுவதில் திமுக அரசு தடுமாறிவருகிறது.
கொரோனாவால் அங்கங்கே அழுகுரல் தான் தமிழகம் முழுவதும். கடந்த வாரங்களில் மயானங்களில் இடமில்லை.. மருத்துவமனைகளில் இடமில்லை என தத்தளிதத்து தமிழகம். ஆக்ஸிஜன் தட்டுப்பாடு என கூறியது உடனே மத்திய அரசு அதை நிவர்த்தி செய்தது. தமிழகத்தில் கொரோனா யாரையும் விட்டு வைப்பதில்லை. முதல் அலையில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டார்கள் ஆனால் தற்போது 45 வயதுக்குள் இருப்பவர்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
தினம் தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது ஆனால் அது மிகப்பெரிய மற்றம் இல்லை. சில நாட்கள் பரிசோதனை அளவு குறைகிறது அதனால் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவு. . அது மட்டுமில்லாமல் பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருவது மக்களிடையே மிகப்பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 5 வாரங்களில் மட்டும் 14897 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளார்கள்.
கடந்த ஆண்டில் கொரோனவை எப்படி கையாள்வது என்பது கொரோன என்றால் என்ன என்பது தெரியாமல் அதிமுக அரசு கொரோனவை கட்டுப்படுத்துவத்தில் சிறப்பாக கையாண்டது என்பது தெரியும். ஆனால் தற்போது திமுக அரசு பொறுமை கொள்ளாமல் அனைத்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஐ.பி .எஸ் அதிகாரிகளை மாற்றி வருவதால் கொரோனாவை கையாள்வதில் கோட்டை விட்டது. தினம் தோறும் பலி எண்னிக்கை 350 முதல் 400 பேர் வரை பலி தற்போது. எடப்பாடியை மிஞ்சிய ஸ்டாலின் அவர்கள்.என்று தான் சொல்ல வேண்டும்