ஒரு பக்கம் அமலக்கத்துறையின் பிடியில் திமுக அமைச்சர்கள் சிக்கி வருகின்றார்கள். மறுபக்கம் மாவட்ட நீதிமன்றங்களில் விடுவிக்கப்பட்ட வழக்குகளை உயர்நீதிமன்றம் தாமாக வந்து மீண்டும் விசாரிக்க ஆரம்பித்தது.மேலும் அதில் பொன்முடி அமைச்சர் குற்றவாளி என தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டது தொடர்பான தீர்ப்பை படித்துவிட்டு 3 நாட்களாக உறங்க முடியவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கவலை தெரிவித்துள்ளார்.இது தி.மு.கவுக்கு பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில் திமுக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டார் மீதான மறு ஆய்வு வழக்குகளில் பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் தினமும் பிற்பகல் 3 மணிக்கு விசாரணை நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். இது திமுகவை கலங்கடிக்க செய்துள்ளது. மேலும் இந்த விசாரணையை தேர்தலுக்குள் முடிக்கவேண்டும் என்ற உத்தேசம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அரசியல்வாதிகள் மீதான மறு ஆய்வு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார். இந்த நிலையில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அதிமுக அமைச்சர் வளர்மதி ஆகியோர் மீதான மறு ஆய்வு வழக்குகளில் பிப்ரவரி 5 முதல் தினசரி விசாரணை நடத்தப்படும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
அதேபோல், அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு பிப்ரவரி 12, 13 தேதிகளிலும், முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு பிப்ரவரி 19 முதல் 22ம் தேதி வரையிலும் விசாரணை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் வழக்குகளால் மற்ற வழக்குகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த வழக்குகள் அனைத்தும் பிற்பகல் 3 மணிக்கு மேல் விசாரணை துவங்கும் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் விளக்கத்தை ஜனவரி 30ம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருபக்கம் தமிழகத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஒருபக்கம் கஜானாவில் பணம் இல்லாத பிரச்சனை என திமுக அரசு தள்ளாடி வரும் நேரத்தில் அமலாக்கத்துறையின் நடவடிக்கையும் அமைச்சர்கள் மீதான நீதிமன்ற வழக்குகளும் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி திமுக எம்பி கவுதம சிகாமணி மற்றும் உறவினர் ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், கோபிநாத், கோதகுமார், சதானந்தன், லோகநாதன் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
18 தமிழக சீனியர் அரசியல்வாதிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாம். இவர்கள் அனைவருமே தி.மு.க வைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு எதிராக கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்து, எப்போது ரெய்டு நடத்தலாம் என திட்டமிடப்பட்டு வருகிறதாம்