2 அமைச்சர்கள் மீது ஊழல் புகார்…!! அவசரமாக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.. வெளி வந்த அதிர்ச்சி ரிப்போர்ட்…

kilambakkam-bus-terminus-tender-scam-savukku-shankar

kilambakkam-bus-terminus-tender-scam-savukku-shankar

இதற்கு தான் அவசரமாக திறக்கப்பட்டதா கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல் உள்ளது கிளாம்பாக்கம் பேருந்து நிலைய திறப்பு. ஒருபக்கம் பொது மக்கள் போராட்டம் மற்றொரு பக்கம் ஊழல் புகார் என மாட்டி கொண்டுள்ளது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

கடந்த 2018-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கொரோனா காரணங்களால் பணிகளில் தொய்வு ஏற்பட்டது ஆனால் திமுக ஆட்சி வந்த பிறகு சில மாற்றங்களை ஏற்படுத்தி உதய சூரியன் வடிவில் `கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ என பெயர் சூட்டி அவசர அவசரமாக திறக்கப்பட்டது.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின்கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ.393.74 கோடி செலவில் சுமார் 88.52 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது இந்த பேருந்து நிலையம்.

மழைகாலத்தில் கிளாம்பாக்கம் பேருந்துநிலையத்தில் வெள்ளநீர் தேங்கி அந்தப்பகுதியே வெள்ளக்காடானது. அதேபோல, பேருந்து நிலையத்திn கட்டுமானத்துக்காக பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட இடத்திலிருந்து சட்டவிரோதமாக செம்மண் அள்ளப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த சர்ச்சைகளுக்கு நடுவே, சிஎம்டிஏ-வால் மழைநீர் வடிகால் பணிகள் தொடங்கப்பட்டு அவசர அவசமாக முடிக்கப்பட்டன.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் 32 கி.மீ தொலைவில் இருப்பதால், இங்கிருந்து கேளம்பாக்கம் செல்ல கிட்ட தட்ட ஒரு மணிநேரம் முதல் 2 மணி நேரம் வரை ஆகிறது. அங்கிருந்து ஊருக்கான பேருந்தை தேடுவதற்குள் போதும்போதும் என்றாகிவிடுகிறது.

உடமைகளையெல்லாம் எல்லாம் தூக்கிக்கொண்டி எத்தனை பேருந்துகள்தான் நாங்கள் மாறுவது? இதுவே வட சென்னையில் வசிக்கும் மக்கள் தென் மாவட்டங்களுக்கு செல்லவேண்டுமென்றால் எப்படி செல்வார்கள்?’ என அடுக்கடுக்கான கேள்வி எழுப்பி புலம்பித் தவிக்கின்றனர். எந்த வித முன்னேற்பாடுகள் இன்றி கேளம்பாக்கம் புதிய பஸ்ஸ்டாண்ட் அவசரமாக திறக்கப்பட்டுள்ளது.

கிண்டி, தாம்பரம் என சென்னையின் பல பகுதிகளிலிருந்து கிளாம்பாக்கத்துக்கு மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகிறது என்கிறார்கள். ஆனால், தென் மாவட்டப் பேருந்துகள் பயணித்த வழித்தடங்கள் உள்பட அதே போக்குவரத்து நெரிசல்கள் உள்ள வழித்தடங்களில்தானே கிளாம்பாக்கத்துக்கான லோக்கல் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அப்படி இருக்கும்போது போக்குவரத்து நெரிசல் எப்படி குறையும்?’ என கேள்வி எழுப்புகிறார்கள் தென்மாவட்ட மக்கள்.

இந்த நிலையில்தான், கோயம்பேட்டிலிருந்து மாநகரப் பேருந்துகளின் வெள்ளோட்டம் முடிவடைந்தநிலையில், டிசம்பர் 30-ம் தேதி பேருந்து நிலையம் முழுமையாக திறக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த பேருந்து நிலையத்தின் பாராமரிப்பு புனேவைச் சேர்ந்த பி.வி.ஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டிருக்கிறது.

இங்கு தான் சிக்கல் ஆரம்பித்துள்ளது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பராமரிப்புக்கான டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக திமுக அமைச்சர்கள் மீது பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் ஊழல் புகார் அளித்துள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை 15 ஆண்டுகளுக்கு பராமரிப்பதற்கான டெண்டரில் பிவிஜி எனும் நிறுவனம் மட்டுமே பங்கேற்றுள்ளது. ஒரு டெண்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ளவில்லை எனில், டெண்டர் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்பதே விதி. ஆனால் இந்த டெண்டர் வெளிப்படையாக நடத்தாமல், பிவிஜி என்ற ஒரே நிறுவனத்திற்கு ரகசியமான முறையில் டெண்டரை தந்தது மட்டுமின்றி அவசர அவசரமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்து வைத்துள்ளனர்.

மேலும் டெண்டர் வழங்கியதற்கான கடிதத்தை சிஎம்டிஏ பிவிஜி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. அதில் ஒப்பந்தத் தொகையாக 30 கோடி வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, பிவிஜி நிறுவனம் 2.40 கோடியை ஆண்டு தோறும் சிஎம்டிஏவுக்கு செலுத்துகிறது. ஆனால் பிவிஜி நிறுவனத்திற்கு 50 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் கிடைக்கிறது.

இந்த ஊழலில் சிஎம்டிஏ அமைச்சர் சேகர்பாபு, போக்குவரத்த்துறை அமைச்சர் சிவசங்கர், சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளர் அன்சூல் மிஸ்ரா, நிதித்துறை கூடுதல் செயலர் பிரகாஷ் வடநாரே ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை மனு அளித்துள்ளேன்.

திமுக அரசின் கீழ் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை செயல்படுவதால், இதனை அவர்கள் விசாரிக்க மாட்டார்கள் என்பது எனக்கு தெரியும். இன்னும் இரண்டரை வருடங்கள் தான் அவர்களின் ஆட்சி. நாளை ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன் நிச்சயம் இது விசாரிக்கப்படும். லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவேன், எனக் கூறினார்.

Exit mobile version