ஆட்டத்தை துவக்கிய டி.ஜி.பி சைலேந்திரபாபு !ஆளுநர் சந்திப்பிற்கு பின் 2,512 ரவுடிகள் கைது !!

இதுவரை தமிழக ஆளுநர்களாக முன்னாள் அரசியல்வாதிகள், கட்சிக்காரர்கள் இல்லை மத்திய அரசில் யாருக்கோ அல்லது மாநில அரசு விரும்பி கேட்டு கொண்டவர்களே ஆளுநராக இருந்தார்கள்.

முதல் முறையாக உளவு மற்றும் காவல்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட சுருக்கமாக சொன்னால் அஜித் தோவலுக்கு அடுத்த இடத்தில் உள்ளவர் நியமிக்கபட்டிருப்பது இதுதான் முதல்முறை ஆர்.என்.ரவி என அழைக்கபடும் இந்த புதிய ஆளுநர் பாட்னாவில் பிறந்தவர், 1976ல் காவல்துறைக்கு வந்து கேரளாவில் பணியாற்றி பின் மத்திய உளவுதுறைக்கு மாற்றபட்டவர்.

இந்தியாவின் மிக சிறந்த நடவடிக்கைகளில்லாம் அவருக்கு பங்கு உண்டு, காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அமைதி திரும்ப மிகபெரிய நடவடிக்கை எடுத்தவர் வெளியே தெரியாமல் சாகசங்கள் நிறைய உண்டு, மாறுவேடங்களில் உயிருக்கு அஞ்சாமல் நக்சலைட்டுகளுக்குள் ஊடுருவியவர், கள நிலவரத்தை அறிந்து வந்தவர் என மிகபெரிய சாகசங்களை செய்தவர்.

இந்த நிலையில் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு ஆர்.என்.ரவி அவர்கள் முதல் சந்திப்பு டி.ஜி.பி., சைலேந்திரபாபு உடன்தான் இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் சந்திப்பு முதலில் என எதிர்பார்த்த வேளையில் டி.ஜி.பி.யை சந்தித்தது முதல்வருக்கு ஷாக் என்று கூறுகிறார்கள்!

இந்தநிலையில் குற்றச்செயல்களை தடுக்கும் நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் இரண்டு நாள்களில் 2,512 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக கொலைச் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன.குறிப்பாக தென் மாவட்டங்களில்
ஜாதி ரீதியாகவும், முன் பகையின் காரணமாகவும் கொலைச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்துவந்தன. இதில் தமிழகத்தில் 6 இடங்களில் கொலை செய்யப்பட்டவர்களின் தலை துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் திண்டுக்கல் அருகே தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப் பின் தலைவர் பசுபதி பாண்டியன் கொலைக்கு பழிக்குப்பழியாக இருநாள்களுக்கு முன்பு நிர்மலா என்ற பெண் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

சென்னையிலும் கடந்த இரு வாரங்களில் கொலைச் சம்பவங்கள் அதிகம் நடைபெற்றன. மாநிலம் முழுவதும் ரவுடிகளின் அட்டகாசமும் அதிகரித்து
வருவதாக புகார் எழுந்தது.இதையடுத்து, கொனபாலைச் சம்பவங்களைத் தடுக்கும் வகையிலும்,ரௌடிகளின் அட்டகாசத்தைக்
கட்டுப்படுத்தும் வகையி காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை செய்தனர்.

இதில் தலைமறைவாக இருக்கும் ரவுடிகள்,பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்கும் ரவுடிகள், தொடர்ச்சியாக சட்டவிரோதச்
செயல்களில் ஈடுபடும் நபர்கள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பது முடிவு செய்யப்பட்டது. தமிழக காவல்துறையின் சட்டம்
மற்றும் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு, ரவுடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் ரவுடிகளின் வீடுகள்,வசிப்பிடங்கள் உள்ளிட்ட சுமார் 5.000 இடங்களில் சோதனை செய்தனர்.
தமிழகம் முழுவதும் 2 நாள்களாக போலீசார் தொடர்ந்து மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் குற்றச்செயல்களில் தொடர்புடைய 2,512
பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 5 துப்பாக்கிகள், 934 அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்
செய்யப் பட்டுள்ளன.

போலீசாரின் தேடுதல் வேட்டையில் பிடிப்பட்ட 1,927 பேர் நன்னடத்தை பிணைபத்திரம் எழுதிக்கொடுத்து விட்டு
சென்றுள்ளனர்.முதல் நாள் தேடுதல் வேட்டையில் 450 ரவுடிகள் கைது செய்யப்பட்ட நிலையில், இராண்டாவது நாளில் 2
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்று வரும் காவல் துறையினரின் அதிரடி தேடுதல் வேட்டையை
அடுத்து ரவுடிகள் ஆந்திரம் மாநிலம் தப்பிச்சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஆளுநர் – டி.ஜி.பி., சந்திப்பின் போது, தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகரித்து வருவது குறித்து, முக்கிய அம்சமாக பேசப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Exit mobile version