திமுகவை குஷிப்படுத்த சோனியா,பிரியங்காவை மறந்த தமிழக காங்கிரஸ்… கொடியும் இல்லை தோரணமும் இல்லை….

சென்னையில் தி.மு.க சார்பில் நேற்று நடைபெற்ற மகளிர் உரிமை மாநாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மற்றும் அடுத்த தேசிய தலைவர் என எதிர்ப்பார்க்கப்படும் பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சென்னை ஐடிசி சோழா நட்சத்திர விடுதியில் சோனியா காந்தி, மற்றும் பிரியங்கா காந்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய சோனியா அனைவரும் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டுமென தெரிவித்தர்.

காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரி பேசுகையில், ‘தமிழகத்தில், தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது, காங்கிரஸ் வளர்ச்சி அடைந்துள்ளது. பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம், 70 சதவீதம் முடிவடைந்து கட்சி வலுவாக உள்ளது’ என்று குறிப்பிட்டார்.ஆனால் இரண்டு நாள் பயணமாக தமிழகத்திற்கு வந்த இண்டி கூட்டணியின் முக்கிய தலைவர்கள் சோனியா மற்றும் பிரியங்காவை, தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவனுக்கோ அல்லது காமராஜர் அரங்கத்திற்கோ அழைத்து செல்லவில்லை. திமுகவினரும் பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை

சிறப்பான வரவேற்பு அளித்திருக்கலாம்; அதை செய்யவில்லை. கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், சோனியா, பிரியங்காவை பார்க்க ஏற்பாடு செய்திருக்கலாம்.ஆனால், ஆளுங்கட்சியினர் நடத்தும் விழா என்பதால், அது குறித்த சிந்தனையே இல்லாமல் இருந்துவிட்டனர் காங்கிரசார் வரவேற்பு பணிகளை சரிவர செய்யாமல், கொடி, தோரணங்களுக்கு முக்கியத்துவம் தராமல், சோனியா, பிரியங்கா வருகையை அலட்சியமாக எதிர்கொண்டு விட்டனர். இதனால், அவர்கள் இருவர் வருகை, தமிழக அரசியலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

தமிழக காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரிக்கையில் திமுக சொல்லும் வேலைகளை மட்டும் செய்துள்ளார்கள் காங்கிரசார். சோனியாவிற்கு மிக பெரிய அளவில் வரவேற்பு இருக்க கூடாது இங்கு திமுக தான் ஹீரோ காங்கிரஸ் இல்லை என்று திமுக தலைமை காங்கிரசுக்காரர்களுக்கு மறைமுகமாக செய்தியை சொல்லியுள்ளார்கள்.

சோனியாவையும் பிரியங்கா காந்தியும் வரவேற்பு அளிக்க முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது என்பதில் சீரியசாக இருந்துள்ளார்கள் திமுகவினர். எந்த இடத்திலும் திமுகவை தாண்டி எந்த வேலையும் செய்யமுடியமால் திணறியுள்ளார்கள் அடிமட்ட காங்கிரசார்.

Exit mobile version