22 வயது பெண்ணை வீடியோ எடுத்து கூட்டு பலாத்காரம் செய்த தி.மு.க நிர்வாகிகள் ஜுனைத் அகமது மற்றும் ஹரி ஹரன்! #Rape

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஒரு வருடமாக இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வந்த திமுக நிர்வாகிகள், ஜுனைத் அகமது, ஹரி ஹரன் மற்றும் பள்ளி மாணவர்கள் உட்பட எட்டு பேரை காவல்துறை கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது பெண் தனியார் ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார் மேலரத வீதியை சேர்ந்த திமுக பிரமுகர் ஹரிஹரனும் அந்த பெண்ணும் நட்பாக பழகி வந்துளார்கள். நாளடைவில் காதலாக மாறியுள்ளது. காதலன் என்பதால் அந்தபெண் அவருடன் தனிமையில் சந்தித்து பேசிவந்துள்ளார். அப்போது இருவரும் நெருக்கமாக பழகியுள்ளனர்.

காதலியுடன் நெருக்கமாக இருந்ததை ரகசியமாக ஹரிஹரன் வீடியோ எடுத்து வைத்துள்ளார். இந்நிலையில் மொன்னி தெருவை அவரது நண்பரான திமுக நிர்வாகி ஜீனைத் அகமது, பிரவீன் மற்றும் அதே தெருவைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 4 பேரும் அந்த வீடியோவை பார்த்துள்ளனர். இதனையடுத்து ஜீனைத் அகமது அந்த ஆபாச வீடியோவை காட்டி மிரட்டி அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். ஹரிஹரன் மற்றும் அவரது நண்பர் உட்பட 7 பேர் ஆபாச வீடியோவை காட்டி மிரட்டி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.

எங்களது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதளத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இதன் காரணமாக அந்தப்பெண் யாரிடமும் சொல்லாமல் அச்சத்தில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் இளைஞர்களின் தொல்லை தாங்க முடியாமல் டிரைவர் வேலை பார்க்கும் மாடசாமியிடம் எடுத்துச்சொல்லி, காப்பாற்றும்படி கெஞ்சியிருக்கிறார்.

மாடசாமியோ, அந்த வீடியோவை தனது செல்போனுக்கு ஃபார்வேர்ட் செய்துகொண்டு, ‘அந்த 7 பேரிடம் பழகியதைப் போல என்னிடமும் பழகவேண்டும். மறுத்தால், இந்த வீடியோவை உன் அம்மாவிடம் காட்டுவேன்.’ என்று மிரட்டி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

உதவ வேண்டிய மாடசாமியும் மிரட்டி, அதே தவறைச் செய்ததால் விரக்தியடைந்த இளம்பெண், கடந்த 6 மாத காலமாக வீடியோவைக் காட்டி மிரட்டி, 7 பேர் தன்னைத் தொடர்ந்து சிதைத்து வந்ததையும், மாடசாமியின் அத்துமீறலையும், குமுறலுடன் புகாராக எழுதி, விருதுநகர் பாண்டியன் நகர் காவல்நிலையத்தில் கொடுத்தார். இப்புகாரின் பேரில் திமுகவை சேர்ந்த இருவர், கூலி தொழிலாளிகள் இருவர், பள்ளி மாணவர்கள் 4 பேர் என 8 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

நன்றி : நியூஸ் 18 தமிழ்நாடு

Exit mobile version