மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து இடைத்தரகர்களுக்கு ஆதரவளிக்கும் தி.மு.க அரசு! அணிதிரளுமா விவசாய சங்கங்கள்!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அரசை எதிர்த்து தீர்மானம் கொண்டு வருவதே தி மு க விற்கு வேலை.

தனக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்த டெல்டா மாவட்டங்களின் விவசாயிகளுக்கு துரோகம் செய்யும்
திமுக இடைத்தரகர்களை ஊக்குவிக்கிரராக ஸ்டாலின்

இந்த புதிய வேளாண் சட்டத்தின் சாதக பாதங்கள் என்ன என்பதை அரசியல் கட்சிகள் இல்லாத விவசாயிகள் அமைப்புகளுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பேச்சு வார்த்தை நடத்திவிட்டு இந்த புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்திருக்க வேண்டும். அவசரக்கதியில் தீர்மானம் கொண்டு வரக்கூடாது.

தமிழக அரசு வேளாண்மைதுறைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. ஆனால் விவசாயிகளின் இன்றைய நிலைமை என்ன தமிழக அரசுக்கு தெரியவில்லை. உதாரணம் விளைந்த நெல்லை உலர் வைக்க கலம் இல்லை.

மேலும் விவசாயப் பொருட்களை சேமித்து வைக்க கிடங்குகள் இல்லை. இதையெல்லாம் விட்டு விட்டு தார்ப்பாலின் வாங்க 55 கோடி ரூபாய் நிதி ஓதிக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சரியான முறையில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. திறந்த கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல் விற்க முடியாமல் அலைக் கழிக்கப் படுகிறார்கள்.

இதற்கு ஒரே வழி புதிய வேளாண் சட்டம் அமல் படுத்த வேண்டும். அப்பொழதுதான் விவசாயிகளுக்கு நிலையான வருவாய்க்கு உத்தரவாதம் கிடைக்கும். இன்றும் விவசாயப்பொருட்கள் நடுரோட்டில் கொட்டும் அவலம் தொடர்கிறது.

தக்காளியை தெருவில் கொண்ட வேண்டிய அவசியம் கிடையாது விளைந்த நெல்லை தார் ரோட்டில் கொட்டி காய் வைக்க வேண்டிய அவசியம் கிடையாது.

தனியார் வியாபாரிகளிடம் அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டிய அவசியம் கிடையாது அவசரத் தேவைகளுக்கு அதிக பட்ச வட்டிக்கு பணம் வாங்க வேண்டிய அவசியம் கிடையாது.

விவசாயிகளுக்கு நிலையான வருமானத்திற்கு உத்தரவாதம் கிடைக்கும். இப்பொழுது விவசாயிகளின் நிலைமை அதாள பாதாளத்தில் உள்ளது இதனால் புதிய வேளாண் சட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்போம். இல்லையெனில் விலகிவிடலாம். சட்டம் வருவதற்கு ஏன் இந்த எதிர்ப்பு.

இதற்கு யாரும் குரல் எழுப்ப மாட்டார்கள். இப்பொழது இருக்கும் விவசாயக் கொள்கையால் ஏராளமான விவசாயிகள் நிலத்தை இழந்து விட்டார்கள். ஆதரிப்போம் புதிய வேளாண் சட்டங்களை.

Exit mobile version