ஒரு ஆளும் கட்சியை சட்டமன்றத்தில் எதிர்த்து பயத்தில் வைத்திருக்க, ஒரு திறமையான எதிர்கட்சி தலைவருக்கு 20 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தாலே போதும். ஆனால் 80 க்கும் மேல் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தும் என்ன பயன். எதிர்க்கட்சி தலைவரை சட்டமன்றம், நீதிமன்றம், ஆளுனர் மாளிகை என்று எங்கு சென்றாலும் மதிப்பு இல்லை. கருணாநிதியின் மகன் என்ற ஒரு தகுதியை தவிர வேறு என்ன தகுதி உள்ளது ஸ்டாலினுக்கு, ஒரு செயலையும் ஒழுங்கா செய்ய முடியாத ஒரு தலைவர்தான் முக ஸ்டாலின்.
தி.மு.க நிர்வாகத்தில் அனைத்து முடிவுகளையும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும், மகன் உதயநிதி ஸ்டாலினும் தான் முடிவு எடுத்து வருகிறார்கள், என்பதை சமீபத்தில் தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்டுள்ள ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி தி.மு.க உறுப்பினர் கு.க.செல்வம் வெட்ட வெளிச்சமாக மீடியாக்களுக்கு பேட்டி அளித்தது நம் அனைவருக்கும் நன்றாக தெரியும்.
இதனால் ஸ்டாலினை நம்பி அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்ற தி.மு.க மாவட்ட செயலாளர்களும், நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும், தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும், துர்கா மற்றும் உதயநிதி கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் தி மு க குறித்தும், தங்களுடைய எதிர்காலம் குறித்தும் மிகவும் குழப்பதிலும் , அச்சத்திலும் உள்ளார்கள். இதில் முக்கியமாக தயாநிதியும் ஒன்று எவ்வாறு உதயநிதியின் கீழ் வேலை பார்ப்பது என குழப்பத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும் உதயநிதி பிரஷாந்த் கிசோர் சொல்வதை மட்டும் ஸ்டாலின் கேட்பதாகவும் கட்சியின் சீனியர்கள் ஸ்டாலினை பார்க்கவேண்டும் என்றாலும் முதலில் உதயநிதியை பாருங்கள் என்று அறிவாலயம் அறிவித்துள்ளதாக செய்திகள் வர தொடங்கியுள்ளது. மேலும் கனிமொழி ஒருபக்கம் அரசியல் நடத்தினாலும் அவர் ஸ்டாலின் குடையின் கீழ் வருவது சற்று குழப்பம் தான். ஸ்டாலின் கனிமொழிக்கு ஆற்றவகை குரல் கொடுத்தார் . இது கேடி பிரதர்ஸுக்கு பிடிக்கவில்லை. இந்தப்பக்கம் சென்றால் உதய் இந்தப்பக்கம் சென்றால் கனிமொழி ராசா , என்ன செய்வதென்று புரியாமல் உள்ளார் தயாநிதி. ஆனால் கலாநிதி தனது பிசினஸ் மட்டும் போதும் என ஒதுங்கிவிட்டார். சபரீசன் தலையீடு பிரசாந்த் கிஷோர் என இருவரும் கலாநிதி தயாநிதியை ஓரங்கட்டி விட்டார்கள். சன் குழுமத்தால் தான் திமுக அஆட்சியை பிடித்தது என்பதை மறந்து விட்டார்கள் என சன் குழுமம் புலம்பி வருகிறதாம்.
இந்த நிலையில் சன்குழுமத்தின் பத்திரிகை தினகரனில் முழுப்பக்க விளம்பரம் இன்று வெளியாகியுள்ளது. அதில் எங்களின் ஓட்டு உங்களுக்கே என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இது திமுகவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு விளம்பரமாக இருந்தால் பரவாயில்லை இது மாணவர்கள் அமைப்பு என எடப்பாடி அவர்களின் தேர்தல் பிரச்சாரத்திற்கு செய்யப்பட்ட விளம்பரம் ஆகும். அதிமுகவின் விளம்பரம் முழுப்பக்கம் என்பதை மாறன் சகோதர்களிடம் அனுமதி வாங்காமல் போடமாட்டார்கள். இதிலிருந்து தெரிகிறது திமுகவின் உட்கட்சி பூசல் வெளிவர தொடங்கியுள்ளது என்பது.