வெள்ளிக்கிழமை போராட்டமா! களத்தில் இறங்கிய காவல்துறை! தனிப்படைகள் அமைத்து கண்காணிப்பு!

பிப்ரவரி, 13ஆம் தேதியில் இருந்து, 28ம் தேதி வரை, சென்னையில் போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மனித சங்கிலி போன்றவற்றில் ஈடுபட, காவல் துறை தடை விதித்தது.

எனினும் தடையை மீறி, பிப்ரவரி 14 வெள்ளிக்கிழமை சென்னை, வண்ணாரப்பேட்டையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மசூதிக்கு சென்று வந்தவர்கள் அப்படியே போராட்டத்தில் ஈடுபட்டனர் . இந்த போராட்டம் மதியம், 2:00 மணிக்கு துவங்கிய போராட்டம், மாலை, 7:00 மணி வரை நீடித்தது.

அப்போது அங்கு வந்த காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அனுமதி வாங்கவில்லை இதனால் போராட்டக்காரர்கள் கலைந்து போக சொன்னார்கள் காவல்துறை ஆனால் அந்த இஸ்லாமியர்களோ காவல்துறையினிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தள்ளு ஏற்பட்டது.


யாரோ தூண்டிவிட்டு பேசுவது போல் போராட்டக்காரர்கள் மிகவும் கீழ்த்தரமாக காவல்துறையினரை திட்டி தீர்த்தனர்.

இதனை தொடர்ந்து
பின் போராட்டக்காரர்கள் காவல்துறையின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர் இதுல துணை கமிஷனர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள் பின் காவல்துறை மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.கைது செய்தவர்களை விடுவிக்க கோரி இஸ்லாமியர்கள் தமிழகம் முழுவதும் பள்ளிவாசல் அருகே கூடி போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்

இந்த சம்பவம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். சென்னை, பசுமைசாலை சாலையில் உள்ள, அவரது முதல்வர் இல்லத்தில் நடந்த ஆலோசனையில், தலைமை செயலர் சண்முகம், உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர், டி.ஜி.பி., திரிபாதி, பொதுப்பணி துறை செயலர் செந்தில்குமார், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

முதல்வர் எடப்பாடி நடத்திய இந்த அவசர ஆலோசனைக்கு பின், தமிழக அரசு மற்றும் காவல்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி, சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில், போராட்டங்களை துாண்டிவிடும், அரசியல் கட்சியினர், அமைப்பினர், தனிநபர்கள் யார் என, கண்காணிக்கவும், அவர்களை பிடித்து, சிறையில் தள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, கண்காணிப்பு சிறப்பு அதிகாரிகளாக, ஆறு பேர் நியமிக்கப் பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப் பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் வாரம் வெள்ளிக்கிழமை ஆனால் எதாவது போராட்டம் நடைபெற்று வருகிறது, அதில் சிறு கலவரங்களும் ஏற்படுகிறது.

இது தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் விதமாக அமையும் என கருதி இதை கண்காணிக்க தனி குழுவை அமைத்துள்ளது, தமிழக காவல்துறை, வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகான இசுலாமியர்களின் திட்டமிட்ட கும்பல் போராட்டங்களை அடுத்து, குடியுரிமை திருத்தச் சட்டம், என்.பி.ஆர்., க்கு எதிரான போராட்டத்தை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் 6 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து டிஜிபி திரிபாதி பிறப்பித்த உத்தரவில் குடியுரிமை திருத்த சட்டம், என்.பி.ஆர். என்.ஆர்.சி. க்கு எதிராக நடக்கும் போராட்டங்களை கண்காணிக்கவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் 6 பேர் அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

மதுரை – அபய்குமார் சிங்
திருநெல்வேலி – மகேஷ்குமார் அகர்வால், முருகன்
தேனி – பாஸ்கரன்
தூத்துக்குடி – மகேந்திரன்
திண்டுக்கல் – ஜி.ஸ்டாலின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்! இந்த அதிகாரிகள் ஒருங்கிணைத்து சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., செயல்படுவர்… என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, இன்று குடியுரிமை சட்டம், தேசிய மக்கள் பதிவேடு ஆகிவற்றிற்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் குறித்தும் இதன் பின்னணயில் யார் உள்ளார்கள் என்பதை பற்றியும் உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்தது விட்டது. இதன் அடிப்படியில் வெள்ளிக்கிழமை மசூதியில் எடுக்கப்படும் முடிவுகள் என்ன எண்பத்தி பற்றியும் அறிய தனிப்படை அமைத்து களத்தில் குதித்துள்ளது காவல்துறை.

Exit mobile version