சட்டப்பேரவையில் கெத்து காட்டிய ஆளுநர் ஆ.என் ரவி.. திமுக பெருமையெல்லாம் பேச முடியாது.. வேணும்னா நீங்களே படிச்சுக்கங்க..

RN RAVI

RN RAVI

2024 – 2025 பட்ஜெட்டுடன் கூடிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், இன்று ஆளுநர் உரையுடன் துவங்கியது. சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் வர இருப்பதால், ஆளுநர் உரையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என, அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆளுநர் படிக்கும் அறிக்கை என்பது அரசால் தயாரித்து கொடுப்பது ஆகும். அதில் அரசுகளை புகழ்வது போல் தான் அமைக்கப்பட்டிருக்கும்..

தமிழக சட்டப்பேரவையில் தேசிய கீதத்தை புறக்கணித்தாகவும் உரையில் உண்மைக்க மாறான தகவல்கள் உள்ளதால் தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை வாசிக்காமல் ஆளுநர் உரையை சில நிமிடங்களில் முடித்து கொண்டார். இதனையடுத்து ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல்நாளான இன்று தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஆளுநர் ஆர்.என். ரவி பேசியது : அனைவருக்கும் வணக்கம் என தமிழில் கூறி உரையை துவக்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ”2024ம் ஆண்டிற்கான சட்டசபை கூட்டத்தொடரில் உரையாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது.மதிப்பிற்குரிய முதல்வர் அவர்களே , சட்டமன்ற உறுப்பினர்களே, ஊடக நண்பர்களே , சகோதர சகோதரிகளே அனைவருக்கும் வணக்கம் ! என தமிழில் பேசி தொடர்ந்து அவர் ஆங்கிலத்தில் உரையாற்றினார்

அரசு தயாரித்த உரையில் உண்மைக்க மாறான தகவல்கள் உள்ளதால் நான் இந்த உரையை படிக்க விரும்பவில்லை. நான் ஏற்கனவே கேட்டுக்கொண்ட போதிலும், உரையை துவங்கும் முன் தேசியகீதம் இசைக்கப்படவில்லை. தேசிய கீதத்தை முதலிலும், இறுதியிலும் இசைக்க வேண்டும்” . வாழ்க பாரதம், வாழ்க ஜனநாயகம், ஜெய்ஹிந்த், நன்றி எனக்கூறி உரையை முடித்தார்.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி அல்லது பிப்ரவரியில், சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் துவங்குவது வழக்கம். கடந்த ஆண்டு ஆளுநர் ஆர்.என் ரவி உரையாற்றிய போது, அச்சிடப்பட்ட தன் உரையில், சில பகுதிகளை விடுத்தும், சிலவற்றை சேர்த்தும் பேசினார்.

இதை எதிர்பார்க்காத முதல்வர், அரசு அச்சிட்டு அளித்த உரையை மட்டும் சபையில் பதிவு செய்ய, சட்டசபையில் தீர்மானம்கொண்டு வந்தார். இதனால் கோபமடைந்த ஆளுநர், சட்டசபையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

இச்சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியது. அதன்பின் கவர்னருக்கும், தமிழக அரசுக்கும் இடையே பல்வேறு விஷயங்களில் மோதல் தொடர்கிறது. இதனால், இந்த ஆண்டு சட்டசபையில் உரையாற்ற, கவர்னர் அழைக்கப்படுவாரா என்ற சந்தேகமும் எழுந்தது.

ஆனால், வழக்கம்போல சட்டசபை கூட்டம், கவர்னர் உரையுடன் துவங்கும் என, சபாநாயகர் அப்பாவு இம்மாதம் 1ம் தேதி அறிவித்தார். அதன்படி, நடப்பு ஆண்டின் முதல் கூட்டம் இன்று துவங்கியது.
கவர்னர் உரை மீதான விவாதம் மற்றும் பதிலுரைக்கு பின், மீண்டும் சட்டசபை கூட்டம் வரும் 19ம் தேதிநடக்கும். அன்று 2024 – 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல்செய்யப்படும்.

மறுநாள், வேளாண் பட்ஜெட் தாக்கலாகும். தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் சிலநாட்கள் நடக்கும். தேர்தல்நேர பட்ஜெட் என்பதால், அதிலும் அரசின் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Exit mobile version