சீன மொழியில் பிறந்த நாள் வாழ்த்து! ஸ்டாலினை பங்கம் செய்த தமிழக பாஜக…

#HBDCMMKStalin

#HBDCMMKStalin

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று தனது 71வது பிறந்த நாள். இதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டிவீட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திமுகவினர் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

இதனிடையே திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தனது டிவீட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்டாலின் அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் மக்கள் பணி தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.. என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதை தொடர்ந்து தான் தமிழக பாஜகவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சம்பவம் லோடானது. சீன மொழியில் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து பங்கம் செய்துள்ளது தமிழக பாஜக. இதுகுறித்த பாஜகவின் டிவீட்டர் பதிவில், முதல்வர் ஸ்டாலினுக்கு பிடித்த சீன மொழியில் தமிழக பாஜக சார்பில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் அவர் நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு காரணம் கடந்த 27 ஆம் தேதி தமிழகம் வந்த பிரதமர் மோடி கடந்த 28 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவுக்கான புதிய ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சி தொடர்பாக திமுக சார்பில் நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்கப்பட்டது.

அதில் சீனக்கொடியுடன் இருக்கும் சீன ராக்கெட்டின் படம் இடம் பெற்றிருந்தது. இதையடுத்து திமுக அரசுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இந்த விளம்பரம் குறித்து பேசிய திமுக எம்பி கனிமொழி, சீனா என்ன எதிரி நாடா? என கேட்டு ஆதரவாக பேசியிருந்தார். இதன் காரணமாகவே இன்று ஸ்டாலினுக்கு சீன மொழியில் வாழ்த்து தெரிவித்து சம்பவம் செய்துள்ளது தமிழக பாஜக இது பெரும் அளவில் வைரலாகி வருகிறது. திமுகவினரிடையே பரபரப்பை கிளப்பியுள்ளது. பிறந்தநாளன்று கூடவா? என் திமுகவினர் புலம்பி வருகிறார்கள்.

Exit mobile version