தாசில்தார் ஆசியுடன் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சர்ச்… 4 வாரத்துக்குள் இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னையை அடுத்து காஞ்சிபுரத்தில் தாசில்தாரின் ஆசியுடன் அரசு நிலத்தை ஆக்கிரமித்து, கிறிஸ்துவ மத போதகர் கட்டிய தேவாலயத்தை 4 வாரத்திற்குள் இடிக்க, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்டம் பென்னலுார் கிராமத்தில் வசித்து வரும் முருகேசன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனு: ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, பென்னலுார் கிராமத்தில் உள்ள அரசு நிலம், மயானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மயானம் செல்வதற்கான வழியை ஆக்கிரமித்து தேவாலயம் கட்ட, 2004ம் ஆண்டில் முயற்சி நடந்தது. கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், சர்ச் கட்டவில்லை.

கடந்த 2013ம் ஆண்டில், மீண்டும் சர்ச் கட்ட முயற்சி நடந்தது. உடனடியாக மனு அளிக்கப்பட்டது. கட்டுமான பணிகளை நிறுத்தும்படி அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இரவு நேரத்தில் கட்டுமானம் நடந்தது. மாவட்ட நிர்வாகம் தரப்பில் தீவிரமாக தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடவில்லை. மயானம் என வகுக்கப்பட்ட பகுதியை, அப்படியே பராமரிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் கிறிஸ்துவ மத போதகர் தரப்பில், ‘எட்டு ஆண்டுகளாக இந்த இடத்தில சர்ச் இயங்கி வருகிறது. சிறிய அளவில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு, கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே, சர்ச் நடவடிக்கைகள் தொடர அனுமதிக்க வேண்டும்’ என கூறப்பட்டது.மாவட்ட நிர்வாகம் தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு பிளீடர் ‘குறிப்பிட்ட சர்வே எண்ணில் உள்ள இடத்தை, மயானமாக பயன்படுத்தவில்லை. கிராம மக்களும், தீவிர எதிர்ப்பு தெரிவிக்கவில்லை’ என்றார்.

வழக்கினை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு: ஸ்ரீபெரும்புதுார் தாசில்தார் தாக்கல் செய்த பதில் மனுவை பரிசீலிக்கும் போது, ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக உள்ளது. பொது சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய கடமை, அரசு அதிகாரிகளுக்கு உள்ளது. யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றால், அரசு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அனுமதிக்கலாமா. குறிப்பிட்ட சர்வே எண்ணில் உள்ள இடம், மேய்க்கால் புறம்போக்கு என உள்ளது. இதை, மத போதகர் ஆக்கிரமித்து கட்டட அனுமதி பெறாமல் கட்டுமானம் மேற்கொண்டுள்ளார்.

ஆக்கிரமிப்புகள் குறித்து அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சட்ட விரோத நடவடிக்கையை அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தை, நான்கு வாரங்களுக்குள் இடிக்க வேண்டும்.

வேறு நிலம் இருந்தால், கட்டுமானம் எழுப்ப அனுமதி கேட்டு விண்ணப்பிக்கலாம். அதிகாரிகளின் மெத்தனம், கடமை தவறியது குறித்து விசாரணை நடத்த, கலெக்டருக்கு உத்தரவிடப்படுகிறது. ஆக்கிரமிப்பு செய்து சட்ட விரோதமாக வழிபாட்டு தலங்கள் கட்டப்பட்டு இருந்தால், கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

விடியல் அரசு வந்ததிலிருந்து இது வரை 153 கோவில்கள் இடிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். உண்மையா தெரியவில்லை. ஆனால், அமைதிமார்க்க அன்புமார்க்க இடங்கள் ஒன்றில் கூட கைவைக்கவில்லை. ஏனென்றால் இது அவர்களுக்கான ஆட்சி!

Exit mobile version