தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் மகாவிஷ்ணு பெயர் தான் இதற்கிடையில் கோவையில் ஹிஜாப் செய்த அன்சார்,கைது அன்னை வேளாங்கண்ணி பாலிடெக்னிக் கல்லுாரியில் நேற்று முன்தினம் வேளாங்கண்ணி மாதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பது இதுலகல்லுரி நேரத்தில் மாதா சிலையை ஊர்வலமாக கல்லுாரி வளாகம் முழுதும் எடுத்து வலம் வந்த சம்பவங்கள் மறைந்து விட்டது என இந்து மத ஆதரவாளர்கள் கூறிவருகிறார்கள்
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையத்தில், அன்னை வேளாங்கண்ணி பாலிடெக்னிக் கல்லுாரியில் நேற்று முன்தினம் வேளாங்கண்ணி மாதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.அதுவும், கல்லுாரி வேலை நேரமான காலை, 10:00 மணிக்கு விழா துவங்கியது. விழாவிற்கு கல்லுாரி செயலர் யேசுதங்கம் தலைமை தாங்கினார்.
தமிழக அரசின் உத்தரவை மீறி நடந்த இந்நிகழ்ச்சியின் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சர்ச்சையான இந்த வீடியோவில், ‘சென்னைக்கு பொங்குகின்ற சிலர், பல்வேறு கல்லுாரிகளில் நடக்கின்ற அநியாயங்களை கண்டும், காணாமல் இருப்பது நகைப்புக்குரியது.
‘பக்கத்திலே இருக்கக்கூடிய அங்கு செட்டிப்பாளையம் அன்னை வேளாங்கண்ணி தொழில்நுட்பக் கல்லுாரியில் ஹிந்து, முஸ்லிம் உள்ளிட்ட மாணவ – மாணவியரை கல்லுாரியில் பணிபுரியும் பேராசிரியர்களை கட்டாயப்படுத்தி, கல்லுாரி நேரத்தில் மாதா சிலையை ஊர்வலமாக கல்லுாரி வளாகம் முழுதும் எடுத்து வலம் வருவது எந்த விதத்தில் நியாயம்.
இதற்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பொங்கமாட்டாரா’ என, கேள்வி எழுப்பியுள்ளனர். கல்வி நிறுவனங்களில், கல்விக்கு தொடர்பில்லாத நிகழ்ச்சிகள் எதையும் நடத்தக்கூடாது என, தமிழக அரசு விதித்துள்ள தடையை மீறி நடந்துள்ள வேளாங்கண்ணி மாதா பிறந்த நாள் விழா புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், ‘வேளாங்கண்ணி மாதாவை தோளில் சுமந்து, கல்லுாரி முழுக்க சுற்றிவர வைத்த, தொழில்நுட்பக் கல்லுாரி மீது அரசு நடவடிக்கை எடுக்குமா’ என, ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம.ரவிக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
‘பள்ளிகளில் மதம் சார்ந்த எந்த கருத்துக்களும் பேசக்கூடாது என, அமைச்சர் மகேஷ் கூறுகிறார். விநாயகர் சதுர்த்தி விழா பள்ளிகளில் கொண்டாடக் கூடாது.ஆனால், அன்னை வேளாங்கண்ணியை துாக்கி சுமப்பது நியாயமா? இது மறைமுகமான மதமாற்றத்திற்கு வழிவகுக்காதா? அந்த கல்லுாரி நிர்வாகத்தின் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?
கல்வி காவிமயமாகி விடக்கூடாது என கருத்து தெரிவிப்போர், வேளாங்கண்ணி தெய்வத்தை துாக்கி சுமக்கும், தொழில்நுட்பக் கல்லுாரி குறித்து என்ன கருத்து சொல்லப் போகின்றனர் என பார்ப்போம்’ என்றும், அவர் தெரிவித்து உள்ளார்.