மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் பத்ம விருதை பெற்றுக்கொண்ட அவரது மகள்கள்..!!

பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும் இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றாகும். இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. 

பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது.
2022- ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 128 பேருக்கு அறிவிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் 4 பத்ம விபூஷன், 17 பத்ம பூஷன் மற்றும் 107 பத்மஸ்ரீ விருதுகள் உள்ளன. விருது பட்டியலில் 34 பேர் பெண்கள் மற்றும் 13 பேர் மரணத்திற்குப் பின் விருது பெற்றவர்கள்.இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா ராஷ்டிரபதி பவனில் இன்று நடைபெற்றது.


இந்த விழாவில் ஹெலிகாப்டர்  விபத்தில் மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்துக்கான பத்ம விபூஷன் விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் இருந்து அவரது மகள்கள் பெற்று கொண்டனர்.


குன்னூர் அருகே கடந்த வருடம் டிசம்பர் 8-ந்தேதி விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version