பெருமை கொள்வோம்! பராக்கிரம பாண்டியனின் சிவ பக்தியை கண்டு -எச்.ராஜா.

மன்னன் பராக்கிரம பாண்டியன் தன் மனைவியுடன் தீர்த்தயாத்திரை கிளம்பி காசி விஸ்வநாதரைத் தரிசித்து வந்தான். ஒரு சமயம் மன்னனின் கனவில் காசி விஸ்வநாதர் தோன்றி, தென்னாட்டிலும் தனக்கொரு ஆலயம் கட்டும்படி கட்டளையிட்டார். எந்த இடத்தில் கட்டுவது என்று மன்னன் குழம்பிக் கொண்டிருந்தான்.

ஒரு நாள் செண்பக வனமாக இருந்த காட்டுப்பாதையில் எறும்புகள் சாரை சாரையாகச் செல்வதைக் கவனித்தான். பராக்கிரம பாண்டியன் அதைப் பின்தொடர வழியில் ஒரு சிவலிங்கத்தைக் கண்டான். தான் கனவில் கண்ட காசிவிஸ்வநாதப் பெருமானே அங்கு லிங்கவடிவத்தில் இருப்பதாக அவன் மனதிற்கு தோன்றியது. சிவாலயம் கட்டும் திருப்பணிகளை மன்னன் மேற்கொண்டான்.

கோயிலைக் கட்டி முடிக்க ஆறுஆண்டுகள் ஆனது. தன் உடல், பொருள், ஆவி அத்தனையும் சிவனுக்காக அர்ப்பணித்த மன்னன் “கோயிலைக் கட்டுவது எளிது. ஆனால் அக்கோயிலைப் பராமரிப்பது அரிது. வருங்கால சந்ததியினர் அக்கறையுடன் இக்கோயிலைப் பராமரிக்கவேண்டும் என்றும், அப்படி பாதுகாப்பவர்களின் காலில், இப்போதே விழுந்து வணங்குகிறேன்,” என்று பாடலாக கல்வெட்டில் குறிப்பிட்டான்.

தற்போது இருக்கும் தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலே இது.

எச்.ராஜா,பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் வேண்டுகோள்.

Exit mobile version