இண்டியா கூட்டணிக்கு அடுத்த சிக்கல்,ராகுல் தொகுதியில் கம்யூ., போட்டி.

எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்., கட்சிகள், ஆம்ஆத்மி, சமாஜ்வாதி, திமுக, உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன.இதற்கு முன்பே கூட்டணியில் இருந்த பீகார் மாநில முதலவர் நிதிஷ்குமார் உள்ளிட்டோரின் கட்சிகள் இந்தக்கூட்டணியில் இருந்து விலகியதால் இந்த கூட்டணி கத்தி கலங்கி இருக்கும் நிலையில் .

சில மாநிலங்களில் காங்கிரசுக்கு இடம் கொடுக்காமல், தனித்து களமிறங்க உள்ளதாக கூட்டணி கட்சிகள் அறிவித்தன. சில மாநிலங்களில் இன்னும் கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கேரளாவில் திருவனந்தபுரம், திருச்சூர், வயநாடு மற்றும் மாவேலிகரா ஆகிய 4 லோக்சபா தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இந்திய கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது. இதில் வயநாடு தொகுதியில் இந்திய கம்யூ., தலைவர் டி.ராஜாவின் மனைவியான அன்னி ராஜா போட்டியிடுகிறார். வயநாடு தொகுதியில் தற்போது காங்கிரசின் ராகுல் எம்.பி.,யாக உள்ளார். கூட்டணி இன்னும் இறுதியாவதற்குள் ராகுலின் தொகுதியில் தன் கட்சி போட்டியிடுவதாக இந்திய கம்யூ., அறிவித்ததால் மீண்டும் இண்டியா கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version