சீனாவுக்கு மரண அடி கொடுக்க தயாரான இந்தியா! அமெரிக்காவுடன் போடப்பட்ட ஒப்பந்தம்!

இந்திய சீன எல்லைப்பகுதியான லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15ம் தேதி இந்திய – சீன ராணுவ வீரர்களிடையே நடந்த மோதலில், 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதில், சீன தரப்பில் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதன் பின் உயர்மட்ட ரீதியிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு எல்லையில் இருந்து 2 கி.மீ. தொலைவுக்கு சீன வீரர்கள் பின்வாங்கி சென்றார்கள்.
ஆனாலும் சீன அதிக அளவிலான படைகளை எல்லை அருகே குவித்து வருகிறது . இதற்கு பதிலடியாக இந்தியாவும் தனது படை சக்தி வாய்ந்த பீரங்கி டேங்குகள் பிரோமோஸ் ஏவுகணை என எல்லையை சுற்றி பலப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் இந்திய விமானப்படையின் மிகப்பெரிய சரக்கு விமானமான C-130J Super Hercules உதிரி பாகங்கள் கொடுப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதற்காக, இரு நாடுகளும் 90 மில்லியன் டாலர் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன அமெரிக்காவும் இந்தியாவும்.

இந்திய-அமெரிக்க மூலோபாய உறவுகளை இந்த ஒப்பந்தம் மேலும் வலுப்படுத்தும் என்று அமெரிக்க Defense Security Agency தெரிவித்துள்ளது. இதன் மூலம், இரு நாடுகளும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை, அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றில் முன்னேறும்.

இந்த ஒப்பந்தத்தின்படி, சி -130 ஜே சூப்பர் ஹெர்குலஸ் விமானத்தை பழுது பார்க்க அமெரிக்கா இந்தியாவுக்கு உதவும். அதோடு, இந்த விமானத்திற்கு தேவையான உதிரி பாகங்களும் வழங்கப்படும். AN/ALR-56M வகையின் மேம்படுத்தப்பட்ட அட்வான்ஸ் ரேடார் எச்சரிக்கை அமைப்பு, 10 இலகுரக இரவு பார்வை தொலைநோக்கிகள், 10 இரவு நேரத்தில் பார்க்கும் கண்ணாடி, ஜி.பி.எஸ் உட்பட பல பொருட்களுக்கு இந்தியா கொள்முதல் ஆர்டரை கொடுத்துள்ளது.

சி -130 ஜே சூப்பர் ஹெர்குலஸுக்கு உதிரி பாகங்கள் மற்றும் சேவை வசதிகள் கிடைத்த பிறகு, இந்திய விமானப்படையின் இந்த விமானங்கள் எந்த நேரத்திலும் செயல்பட தயாராக இருக்கும். இதனால் நம் நாட்டை சீண்டிப் பார்க்க நினைப்பவர்களுக்கும் தயக்கம் ஏற்படும்.

அமெரிக்க சட்டத்தின்படி, மற்ற நாடுகளுடனான பெரிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, அமெரிக்க எம்.பி.க்கள் எந்தவொரு ஒப்பந்தத்தையும் 30 நாட்களுக்குள் மறுபரிசீலனை செய்யலாம். தகவல்களின்படி, அமெரிக்காவுடனான இந்த ஒப்பந்தத்தின்படி, Lockheed Mortgage Company என்ற நிறுவனம் இந்தியாவுக்கு சேவைகளை வழங்கும் பொறுப்பேற்கும்.

சி -130 ஜே சூப்பர் ஹெர்குலஸ் விமானத்தை பயன்படுத்தும் 17 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய விமானப்படையில் சி -130 ஜே சூப்பர் ஹெர்குலஸ் விமானங்கள் ஐந்து இருக்கின்றன. ஆறாவது விமானத்தை வாங்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.

சி -130 ஜே விமானம் கனரக உபகரணங்களை ஏற்றிக் கொண்டு செல்லக் கூடியவை. வேறு எந்த விமானமும் தரையிறங்க முடியாத உலகின் அணுக முடியாத பகுதிகளிலும் அவற்றை தரையிறக்க முடியும். இதற்கு உதாரணமாக 2013 ஆம் ஆண்டில், உலகின் மிக உயரமான ஓடுபாதையான தெளலத் பாக் ஓல்டியில் (Daulat Beg Oldi) சி -130 ஜே விமானம் தரையிறக்கப்பட்டதை நிறுவனம் குறிப்பிட்டது. இது இந்திய விமானப்படையின் மிகவும் துணிச்சலான நடவடிக்கையாகும். 16 ஆயிரம் 614 அடி உயரத்தில் கட்டப்பட்ட இந்த ஓடுபாதையில் இறங்குவதன் மூலம், இந்தியா தனது பாதுகாப்பை தெளலத் பாக் ஓல்டியில் பலப்படுத்தியது.

இது மிகப்பெரிய ஒப்பந்தம் ஆகும் இந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆனதால் சீனாவிற்கு சற்று பீதியை கிளப்பி உள்ளது, குறிப்பிட்ட நேரத்திற்கு ராணுவ தளவாடங்களை எல்லை அருகே கொண்டு செல்வதற்கு இது உதவும்

Exit mobile version