ஆப்கானிஸ்தானில் நடக்கும் பனிபோரின் இறுதியில் வெற்றி பெற போவது இந்தியா!

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதில் இருந்து அங்குள்ள மக்கள் வெளிநாட்டிற்கு தப்பி ஓட அங்குள்ள விமான நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி இருவரும் தொலைபேசி வழியாக பேசி ஆப்கான் அரசுடன் இணைந்து செயல்பட இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள்.

ஆக நேபாளத்தில் இந்தியாவுடன் நடைபெற்ற பனிப்போரில் தோல்வி அடைந்த சீனா ஆப்கானிஸ்தான் மூலமாக இந்தியாவுக்கு குடைச்சல் கொடுக்க இருக்கிறது என்றே தெரிகிறது.

ஆக கடந்த நூற்றாண்டில் ஆப்கானிஸ்தானை மையமாக வைத்து அமெரிக்கா சோவியத் யூனியனுக்கு இடையே நடைபெ ற்ற பனிப்போர் மாதிரியே இப்பொழுது ஆப்கானிஸ்தானை முன் வைத்து இந்தியா சீனா இடையே நடைபெற இருக்கிறது

சிஏஏ காஷ்மீர் விவகாரம் என்று பல விசயங்களில் ஈரான் இந்தியாவுடன் இப்பொழுது முரண்பட்டு நிற்கிறது. அதற்க்காகவே இப்பொழுது சீனாவுடன் இணைந்து நிற்பதாக சொல்கிறது.

சீனாவுடன் இணைந்து ஈரான் செயல்பட நினைத்தாலும் ஆப்கான் தாலிபான்கள் சும்மா இருக்க மாட்டார்கள்.ஏனென்றால் தலிபான்களின் முதல் எதிரி ஷியா முஸ்லிம்கள் தானே தவிர இந்தியா இல்லை

ஆப்கானிஸ்தானில் ஷியா முஸ்லிம்கள் கொல்லப்படும் பொழுது ஈரான் ஆப்கானில் உள்ள ஷியா முஸ்லிம்களை தூண்டி போராட வைப்பார்கள்.அப்பொழுது இந்தியாவுடன் கை கோர்த்து கொள்ளும்.

அமெரிக்கா ஈரானுக்கு எதிராக ஆப்கான் தலிபான்களுக்கு ஆதரவாக நிற்பார்கள் பதிலுக்கு ரஷ்யா ஈரானுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் . ரஷ்யா இதில் நுழைந்த உடன் இந்தியாவுக்கு ஆப்கானிஸ்தான் விசயத்தில் மிக்பெரிய ஆதரவு கிடைக்கும்.அப்பொழுது ஈரான் மீண்டும் இந்தியாவுடன் வந்து ஒட்டி கொள்ளும்

கடந்த நூற்றாண்டில் அமெரிக்கா சோவியத் யூனியன் இடையே பல நாடுகளில் பனிப்போர் நடைபெற்றது.இந்தியா வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கும். ஆனால் இந்தநூற்றாண்டில் மோடி இந்திய பிரதமரான பிறகு இந்தியா சீனா இடையே தான் பலநாடுகளில் பனிப்போர் நடைபெற்று வருகிறது.

அமெரிக்காரஷ்யா வேடிக்கை பார்த்துக்கொண்டுஇருக்கின்றன. இதுவே உலக. அரங்கில் இந்தியாவுக்கு கிடைத்த மிக ப்பெரிய கௌரவமாகும்ஆப்கானிஸ்தானில் நடைபெற இருக்கும் இந்தியா சீனா பனிப்போரில் நேபாளத்தி ல் சீனாவுக்கு கிடைத்த மரண அடி மாதிரியே கிடைக்கும்.

நேபாளத்தில் சித்தாந்த ரீதியாக சீனாவு டன் இணைந்து இருந்த கம்யூனிஸ்ட் ஆ ட்சியையேகவிழ்த்து சீனாவை தோற்கடித்த மோடியினால் ஆப்கானிஸ்தான் பிரச்சனையின் ஆணி வேரான ஷியா சன்னி முஸ்லிம் பிரச்சனையை முன் வைத்து ஆப்கானிஸ்தான் பனிப்போரிலும் இந்தியாவை வெல்ல வைப்பார்.

வலதுசாரி சிந்தனையாளர் – விஜயகுமார் அருணகிரி

Exit mobile version