பாகிஸ்தானை தாக்க ரெடியான இந்தியா…… பயந்த பாகிஸ்தான்… பிரதமர் மோடியுடன் பேச முயன்ற இம்ரான் கான்… வெளிவந்த முக்கிய தகவல்…

Imran-Modi ji

Imran-Modi ji

2019 பிப்ரவரி 14 ஆம் தேதி காஷ்மீர் புல்வாமாவில் செயல்படும் துணை ராணுவப் படை முகாமில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பின் பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இதில், 40 இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதல், நாடு முழுவதும் மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக பாகிஸ்தானை தாக்குவதற்கு 9 ஏவுகணைகளை ஏவத் தயார் நிலையில் இந்தியா வைத்துள்ளது. இந்த செய்தி அப்போதைய பாகிஸ்தான் பாகிஸ்தான் பிரதமர் ஆக இருந்த இம்ரான்கானுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயந்து அச்சம் கொண்ட இம்ரான் பிரதமர் நரேந்திர மோடியுடன், தொலைபேசியில் பேச முயன்றுள்ளார். ஆனால் அதற்கு இந்தியா செவி சாய்க்கவில்லை என தூதரக அதிகாரி அஜய் பிஸாரியா கூறியுள்ளார்.

அஜய் பிஸாரியா, பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் ஆக பணியாற்றியவர். இவர், ‛ anger management: the troubled diplomatic relationship’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார்.

அந்த புத்தகத்தில் கூறியுள்ளதாவது: புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானை நோக்கி 9 ஏவுகணைகளை ஏவத் தயார் நிலையில் இந்தியா வைத்து இருந்தது குறித்து அந்நாட்டிற்கு நம்பகமான தகவல் கிடைத்தது. இதனையடுத்து, இந்தியா பொறுமை காக்க வேண்டும். இது போர் நடப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கிவிடும் என அந்நாடு கூறியது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்தியா மீறியதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டன. பாகிஸ்தான் ராணுவமும் சில விளக்கங்களை அளித்தது.

இந்தியா தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது என பயந்து போன பாகிஸ்தான் பிரதமர் ஆக இருந்த இம்ரான் கான், இதனை நிறுத்துவதற்கும், சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கும் இந்திய பிரதமர் மோடியை நள்ளிரவில் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ள முயன்றார்.

அன்றைய நாளில், நான் டில்லியில் இருந்த போது, பாகிஸ்தான் தூதர் ஆக இருந்த சோஹைல் முகமதுவிடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது, பிரதமர் மோடியுடன், இம்ரான் கான் பேச விரும்புவதாக தெரிவித்தார். டில்லியில் வெளியுறவு அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, மோடியுடன் பேசுவதற்கு வாய்ப்பு கிடையாது. ஏதாவது செய்தி இருந்தால், என்னிடம் தெரிவிக்கலாம் என சோஹைல் முகமதுவிடம் கூறினேன். அதற்கு பிறகு, இம்ரான் கானிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது, இந்தியாவின் ராஜதந்திர முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி. இவ்வாறு அந்த புத்தகத்தில் பிஸாரியா கூறியுள்ளார்.

Exit mobile version