இடைக்கால பட்ஜெட் தாக்கல் : நிர்மலா சீதாராமன் செய்த சாதனை: அடுத்த பட்ஜெட்டும் தாக்கல் செய்வோம்..

#Budget2024

#Budget2024

இன்னும் சில மாதங்களில்நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று (பிப்ரவரி 1) இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

சாதனை படைத்த நிர்மலா சீதாராமன் :
இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சா் என்ற பெருமைக்குரிய இவா், நாட்டின் நிதியமைச்சராக தொடா்ந்து 6 மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த முதல் பெண் என்ற பெருமையையும் நிா்மலா சீதாராமன் பெறுகிறாா்.தொடா்ந்து 5 பட்ஜெட்களை தாக்கல் செய்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், முன்னாள் நிதியமைச்சா்கள் அருண் ஜேட்லி, ப.சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா ஆகியோரின் சாதனையை அவா் முறியடித்துள்ளார்.

கடந்த 1959 முதல் 1964 -ஆம் ஆண்டுவரை தொடா்ந்து 6 மத்திய பட்ஜெட்களை தாக்கல் செய்த முன்னாள் பிரதமா் மொராா்ஜி தேசாய் சாதனையையும் அவா் சமன் செய்தார்.

பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து நிர்மலா சீதாராமன் வாழ்த்து பெற்றார்.தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இடைக்கால பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

நிர்மலா சீதாராமன் தாக்கல் தாக்கல் செய்த பட்ஜெட் அனைத்து மக்களுக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சியே குறிக்கோள்” என தெரிவித்தார்.அவர் பேசியதில் மற்றும் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சில முக்கிய அறிவிப்புகள்

1.வருமான வரியில் மாற்றமில்லை:

நாட்டில் வருமான வரி கட்டுவோரின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 2.4 மடங்கு அதிகரித்துள்ளது. வருமான வரி கட்டும் முறை எளிதாக்கப்பட்டுள்ளது.

வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை. இறக்குமதி வரிகளிலும் எந்த மாற்றமும் இல்லை. நேரடி மற்றும் மறைமுக வரிகளிலும் மாற்றமில்லை.

நடப்பு நிதியாண்டில் வரி வருவாய் 26.02 லட்சம் கோடி கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

2.மாநிலங்களுக்கு கடன்:

அடுத்த 50 ஆண்டுகளில் திருப்பி செலுத்தும் விதமாக மாநிலங்களுக்கு ரூ. 75,000 கோடி கடனாக வழங்கப்படும்.

3.உள்கட்டமைப்பு செலவு அதிகரிப்பு:

2024-25-ஆம் ஆண்டுக்கான உள்கட்டமைப்பு செலவுத் தொகை 11.11 லட்சம் கோடியாக அதிகரிகப்பட்டுள்ளது. உள்நாட்டு சுற்றுலாவை ஊக்குவிக்க லட்சத்தீவுகளில் வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

4.அந்நிய முதலீடு:

கடந்த 10 ஆண்டுகளில் அந்நிய முதலீடு 596 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

2023-24-ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி அரசின் செலவுத் தொகை 40.90 லட்சம் கோடியாக உள்ளது.

2024-25-ஆம் ஆண்டில் நாட்டின் நிதிப் பற்றாக்குறை 5.1 சதவிகிதமாக குறைக்கப்படும். 2025-26-ஆம் ஆண்டில் நிதிப்பற்றாக்குறை 4.5 சதவிகிதமாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2024-25-ஆம் ஆண்டில் ரூ. 11.75 லட்சம் கோடி வெளிச் சந்தையில் இருந்து கடனாக திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5.40,000 வந்தே பாரத் ரயில் பெட்டிகள்

5.வந்தே பாரத் ரயில் பெட்டிகள்

40,000 சாதாரண ரயில் பெட்டிகள் வந்தே பாரத் திட்ட ரயில் பெட்டிகளாக தரம் உயர்த்தப்படும். நாட்டின் விமான நிலையங்கள் 149-ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து விமான நிலையங்கள் விரிவாக்கம் பணி நடைபெறும்.

6.ஆராய்ச்சிக்கு ஒரு லட்சம் கோடி:

ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க வட்டியில்லா கடனாக ரூ. ஒரு லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

7.கர்பப்பை புற்றுநோய் தடுப்பூசி:

ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் அனைத்து அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.

கர்பப் பை புற்றுநோயை தடுக்க 9 முதல் 14 வயதுள்ள பெண்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

8.இலவச மின்சாரம்:

வீட்டின் மொட்டை மாடியில் சூரிய மின்தகடு(சோலார்) அமைத்தால் மாதம்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

9.2 கோடி வீடுகள்:

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறும். 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டித் தரப்படும்.

10.பெண்களுக்கான திட்டம்:

மகளிருக்கு இடஒதுக்கீடு, முத்தலாக் தடை, வீடு கட்டும் திட்டத்தில் பெண்களுக்கு ஒதுக்கீடு ஆகியவற்றால் பெண்கள் பலனடைந்துள்ளனர். பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 70 சதவிகிதம் பெண்களுக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது.

தொழில்கள் தொடங்குவதற்காக பெண்களுக்கு ரூ. 30 கோடிக்கு முத்ரா திட்டத்தில் கடன் வழங்கப்பட்டுள்ளது.

11.கல்வித் துறை வளர்ச்சி:

தேசிய கல்விக் கொள்கை 2020, இந்திய கல்வித்துறையில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. பெண்கள் உயர்கல்வி பெறுவது கடந்த 10 ஆண்டுகளில் 28 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 7 ஐஐடிகள், 16 ஐஐஐடிகள், 17 ஐஐஎம்கள், 15 எய்ம்ஸ் மற்றும் 390 பல்கலைக்கழகங்கள், 3,000 ஐடிஐகள் உருவாக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 1.1 கோடி இளைஞர்கள் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர்.

12.விவசாயிகள் பலன்:

மின்னணு வேளாண் சந்தையால் 8 கோடி விவசாயிகள் பலனடைந்துள்ளனர். ரூ.34 லட்சம் கோடி உதவித் தொகை ஏழை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

11.8 கோடி விவசாயிகள் மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்துள்ளனர்.

13.இலவச ரேஷன்:

நாட்டில் உள்ள 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் பொருள்கள் சென்றடைந்துள்ளன.

அனைவருக்கும் வீடு, குடிநீர், குறைந்த விலையில் சமையல் எரிவாயு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். 10 ஆண்களில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

என பல்வேறு அறிவிப்புகளுடன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன் மேலும் இது இடைக்கால பட்ஜெட் என்பதால் முழுமையான அறிவிப்புகள் இல்லை.அடுத்த முறை நாங்கள் தாக்கல் செய்யும் பட்ஜெட் பல அறிவிப்புகள் வரும் என தெரிவித்தார்.

இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நிதியமைச்சர் அடுத்த பட்ஜெட் நாங்கள் தாக்கல் செய்வோம் என நாடாளுன்றத்தில் கூறிய போது நாடாளுமன்றமே கரகோஷத்தால் ஆர்ப்பரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version