நம் விமானப்படை வீரர்களை கொன்றது யாசின் மாலிக் தான்… கோர்ட்டில் ஆதாரத்தை அளித்த சி.பி.ஐ

Yasin Malik

Yasin Malik

ஜனவரி 25, 1990 அன்று, காலை 7:30 மணியளவில், நம் விமானப் படை வீரர்கள் ஸ்ரீநகர் விமான நிலைய பணிக்கு செல்வதற்காக காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் நான்கு பேர் உயிரிழந்தனர்; 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 1990 ஆகஸ்ட் 31 ஆம் தேதி மற்றும் காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத் தலைவர் யாசின் மாலிக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இந்த வழக்கு ஜம்மு சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று (ஜன., 18) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பவத்தின் போது உடனிருந்த முன்னாள் விமானப் படை வீரர் ராஜ்வர் உமேஷ்வர் சிங் நேரில் ஆஜரானார். புதுடில்லியில் திஹார் சிறையில் உள்ள முக்கிய குற்றவாளியான யாசின் மாலிக் வீடியோ வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, ‘சம்பவம் அன்று தான் அணிந்திருந்த அங்கியில் இருந்து துப்பாக்கியை எடுத்து வீரர்களை நோக்கி யாசின் மாலிக் சரமாரியாக சுட்டார்’ என உமேஷ்வர் அடையாளம் காட்டினார்

இருந்தாலும், பயங்கரவாத யாசின் மாலிக் பல ஆண்டுகளாக சுதந்திரமாக வெளியில் சுற்றித் திரிந்தார். பள்ளத்தாக்கிலுள்ள பிரிவினைவாதிகள் மற்றும் முன்னாள் மன்மோகன் சிங் அரசாங்கத்தின் அரசியல் ஆதரவை அவர் அனுபவித்து வந்தார்.

2007 முதல் யாசின் மாலிக் மீதான வழக்குகளில், அவர் நீதிமன்றங்களில் ஆஜராகவில்லை.ஏப்ரல் 2019 இல், இந்திய எதிர்ப்பு மற்றும் பள்ளத்தாக்கில் பிரிவினைவாத சக்திகள் மீதான ஒடுக்குமுறையைத் தொடர்ந்து பயங்கரவாத நிதி வழக்கில் மாலிக் இறுதியாக என்ஐஏவால் கைது செய்யப்பட்டு பின்னர் திகார் சிறைக்கு மாற்றப்பட்டார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு இந்த காஷ்மீர் பயங்கரவாதியான யாசின் மாலிக்கை நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான், தான் நடத்திய பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் செய்து அவனுக்கு மலர் மாலையும் புகழ்மாலையும் சூட்டி அவனை மிகப் பெரிய போராளி போன்று சித்தரித்து தமிழக இளைஞர்களை அப்போதே மூளைச் சலவை செய்யும் வேலையை செய்து கொண்டிருந்தார்.

இதற்கு அப்போதே பாஜக கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்தது. ஆனாலும் சீமான் அதையெல்லாம் பொருட்படத்தாமல் அவர் ஒரு இன விடுதலை போராளி என்றும் அதனால் யாசின் மாலிக்கை கூட்டி வந்ததில் தவறே இல்லை என்றும் சொல்லி யாசின் மாலிக்கை புகழ்ந்தும் பாராட்டியும் அறிக்கை வெளியிட்டார்.

சீமான் விஷயத்தில் யாருமே அவரை பெரிதாக பொருட்படுத்துவதில்லை ஆனால் அவர் எவ்வளவு ஆபத்தானவர் என்று அவரின் பிரிவினை பேச்சுக்கள் மற்றும் அவரின் நடவடிக்கைகளை பார்த்தாலே புரிந்து கொள்ளலாம் எனவே மத்திய அரசு இனிமேலும் தாமதிக்காமல் தமிழன், தமிழ்தேசியம், இன விடுதலை என்று பேசி தமிழகத்தையும், தமிழக இளைஞர்களையும் ஏமாற்றிக் கொண்டு பிரிவினையை தூண்டிக் கொண்டிருக்கும் இந்த சீமானை கைது செய்து தீவிர விசாரனை மேற்கொள்ள வேண்டும் அப்போதுதான் சீமான் யார் என்ற உண்மை விபரம் தமிழக மக்களுக்கு தெரியவரும் என்ற கோரிக்கை வைத்துள்ளார்கள்

Exit mobile version