கேரள அரசு ஊழியர்களின் கொடூரம் ! அப்பாவி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சுகாதார ஆய்வாளர் !

கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகி உள்ளது. இந்த நிலையில் மக்கள் கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதா இல்லை தினம் ஒரு குற்றம் என கேரளாவை நாசமாக்கிய கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்து போராடுவதா என்பது தெரியாமல் தவித்து வருகிறார்கள். லவ் ஜிகாத் முதல் தங்கம் கடத்தல் வரை கம்யூனிஸ்டுகளின் தரம் கெட்ட ஆட்சி நடந்து வருகிறது. தற்போது மக்களுக்கும் முக்கியமாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை கேரளாவில் இருந்து வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கடந்த சனிக்கிழமை இரவு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அந்த மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வருவதற்குள் மற்றொரு பாலியல் பலாத்கார சம்பவம் கேரளாவை உலுக்கியுள்ளது.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 44 வயதான பெண் ஒருவர் கொரோனா தொற்று அறிகுறிகள் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டார். பின் அவரின் வீட்டினை சுற்றி மருந்து தெளிப்பது என சுகாதர பணிகளை மேற்கொள்ள ஒரு முறை அவரின் வீட்டிற்கு சென்ற்றுள்ளார் சுகாதார ஆய்வாளர் பிரதீப் அப்போதே அந்த பெண்ணின் மீது கம வெறி கொண்டுள்ளார். இதனால் அடிக்கடி அந்த அப்பெண்ணின் வீட்டிற்கு ஆய்வு மேற்கொள்வதாக கூறி சென்று வந்துள்ளார். சுகாதார ஆய்வாளர்பிரதீப் இந்த நிலையில், அந்த பெண்ணுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என வந்துள்ளது.

அதனால் அவருக்கு குவாரன்டைன் முடிவடைந்த நிலையில், பரிசோதனை செய்துகொண்ட சான்றிதழை தனது வீட்டில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு இளநிலை சுகாதார ஆய்வாளர் பிரதீப் கூறியுள்ளார். அதன்படி கடந்த 3 ஆம் தேதி அன்று பாதிக்கப்பட்ட பெண் பிரதீப்பின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டில் யாரும் இல்லாத சூழலில் பிரதீப் மட்டுமே இருந்துள்ளார்.

ஏற்கெனவே பெண் மீது வக்கிர பார்வையை வைத்திருந்த ஆய்வாளர் பிரதீப் அந்த பெண்ணை கட்டிப்போட்டு பலாத்காரம் செய்துள்ளார். மேலும், நான் பலவந்தமாக பலாத்காரம் செய்யக்கூடாது ஆகையால், எனக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் வற்புறுத்தியுள்ளார். வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டியும் உள்ளார். சுகாதார ஆய்வாளர் பாதிக்கப்பட்ட பெண் பங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பிரதீப்பை கைது விசாரித்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டதாக புகார் அளித்துள்ள பெண் பலாத்காரம் செய்யப்பட்ட தடயங்கள் உள்ளன. இருப்பினும் தடயவியல் விவரங்கள் வந்த பிறகுதான் மேற்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவிக்கின்றனர்.இந்த நிலையில் , சுகாதார ஆய்வாளர் பிரதீப் மீது முதல் தகவல் அறிக்கை பதிவாகியுள்ளதால், அவரை பணியிடை நீக்கம் செய்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version