சிறுமி பலாத்காரம்..பாதிரியாரின் தண்டனையை குறைத்த கேரளா உயர்நீதிமன்றம்! கனிமொழி ஜோதிமணி எங்கே?

கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக இருந்த ராபின் வடக்குஞ்சேரி. அந்த தேவாலயத்திற்கு டேட்டா என்ட்ரி பணிக்கு வந்த சிறுமியை பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவை உலுக்கியது.

கேரளாவில் 2016ஆண்டு மே மாதம் 16 வயது சிறுமி ஒருவர் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதி முடித்துவிட்டு தேவாலயத்தில் டேட்டா என்ட்ரி பணிக்காக சென்றுள்ளார். அப்போது அங்கு பாதிரியாராக இருந்த ராபின் வடக்கம்சேரி வேலைக்கு வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அங்கு நடந்ததை யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் மிரட்டியுள்ளார். அதனால் அந்த சிறுமி நடந்த சம்பவம் பற்றி யாருடமும் எதுவும் கூறாமல் இருந்துள்ளார்.

பின்னர் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கண்ணூர் மாவட்டம் கூத்துபரம்பா எனும் இடத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போதுதான் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. அந்த சிறுமி கர்ப்பம் அடைந்து, ஒரு குழந்தையை பெற்றெடுத்தார்.

இதுகுறித்த புகார் அடிப்படையில் 2017 ஆம் ஆண்டு ராபினை கேரள காவல்துறை கைது செய்தனர். இதனைத்தொடர்ந்த பாதிரியார் பணியிலிருந்து நீக்கப்பட்டார். கடந்த 2019ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த கேரள நீதிமன்றம் குற்றவாளியான ராபின் வடக்கம்சேரிக்கு 20 ஆண்டு கடுங்காவல்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ராபின் வடக்கம்சேரி, கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாராயண் பிஷோரடி, ராபின் வடக்கம்சேரிக்கு, கீழ் நீதிமன்றம் விதித்த 20 ஆண்டு சிறை தண்டனையை, 10 ஆண்டாக குறைத்து உத்தரவிட்டார். இதற்கிடையே, ராபின் வடக்கம்சேரியால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, தற்போது, 18 வயது முடிந்துவிட்டது.சமீபத்தில் அவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘என்னை பலாத்காரம் செய்த ராபின் வடக்கம்சேரியை திருமணம் செய்ய விரும்புகிறேன். அதனால், அவருக்கு, ‘ஜாமின்’ வழங்க வேண்டும்’ என கூறியிருந்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் உரிமையை காக்கும் தமிழக அரசியல் தலைவர்கள் கனிமொழி ஜோதிமணி போன்றோர் இதுகுறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்கவிக்காமல் மௌனம் சாதித்து வருகிறார்கள். இதுவே ஒரு இந்து சாமியார் என்றால் பல கருத்துக்கள் வெளிவந்திருக்கும்.

Exit mobile version