கோவையில் மக்களின் வரவேற்பு குறித்து பிரதமர் வெளியிட்ட கருத்து

பாரத பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதை ஒட்டி தினம்தோறும் பொதுக்கூட்டம்,வாகன பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.தீவிர சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் தமிழகம் வருகை புரிந்த பாரத பிரதமர் கோவையில் நடைபெற்ற வாகன பேரணியில் கலந்து கொண்டார். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவேற்றி உள்ளார்.அதில்

கோவை மக்கள் என் மனதை வென்றுவிட்டார்கள்! இன்று மாலை நடந்த ரோட்ஷோ பல ஆண்டுகள் நினைவில் நிற்கும். இதில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டது சிறப்பு. இந்த வாழ்த்துக்கள் பெரிதும் போற்றப்படத்தக்கவை.

தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது. எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை. கோயம்புத்தூரில் இருந்து மேலும் சில காட்சிகள் இங்கே..என தனது கருத்தினை பதிவிட்டுள்ளார்.

அதேபோல் கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியது குறித்தும் அவர் கருத்து பதிவேற்றி உள்ளார் அதில்,1998 ல் நிகழ்ந்த கோயம்புத்தூர் தீவிரவாத குண்டுவெடிப்புகளை மறக்க முடியாது. இன்று இந்த நகரத்திற்கு வந்திருக்கும் போது, அந்த குண்டுவெடிப்புகளில் நம்மை விட்டுப் பிரிந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினேன்.என தனது கருத்தினை பதிவிட்டுள்ளார்.

Exit mobile version