ஈரோடில் ‘லவ் ஜிகாத்’ கல்லூரி மாணவி கடத்தல் விசாரணை !

ஈரோடு, மணல்மேடு, குமாரசாமி இரண்டாவது வீதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் மகள் சந்தியா, 19; தனியார் கல்லுாரியில் பி.காம்., இரண்டாமாண்டு மாணவி. சூரம்பட்டி, பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் அலாவுதீன், 21. கடந்த, 9ம் தேதி மாலை, வீட்டருகே இருவரும் பேசி கொண்டிருந்தனர். இதை பார்த்த தாய் பூங்கொடி, மகளை கண்டித்தார். சிறிது நேரம் கழித்து வீட்டில் மகளை காணவில்லை. கல்விச் சான்றிதழ்களுடன் காணாமல் போய் விட்டார். இது குறித்து சூரம்பட்டி போலீசில் பூங்கொடி புகார் செய்தார்.

இதற்கிடையே நேற்று தன் குடும்பத்தினருடன் வந்து, எஸ்.பி., சசி மோகனிடம், பூங்கொடி அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: என் மகள் சந்தியாவை, காதல் என்ற பெயரில் கடத்தி சென்ற அலாவுதீன், திருட்டு, கொள்ளை மற்றும் ஆள் கடத்தல் வழக்குகளில் கைதாகி சிறை சென்றவர். மகளை வெளிநாட்டுக்கு விற்பனை செய்து விடுவார் அல்லது கொலை செய்து விடுவார் என அஞ்சுகிறோம். மகளை கண்டுபிடித்து தர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காதல் என்ற பெயரில் அப்பாவி பெண்களை ஏமாற்றி மதமாற்றம் செய்யும் செயல் ‘லவ் ஜிகாத்’ என அழைக்கப்படுகிறது. இந்த ரீதியில், இந்த வழக்கில் போலீஸ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

Exit mobile version