பொய் சொல்லி பல்பு வாங்கிய கம்யூனிஸ்ட் எம்.பி வெங்கடேசன்! வச்சு செய்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா !

மக்களிடத்தில் உண்மையை மறைத்து பொய்களை அதிகம் சொல்லும் இயக்கமாக நாளுக்கு நாள் கம்யூனிஸ்டுகள் முன்னேறி வருகிறார்கள்.இதேபோல் கேரளாவுக்கு பினராயி, தமிழகத்துக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தான் என நிருபித்து வருகிறார். தற்போது மதுரை விமான நிலையம் தொடர்பாக ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டார் கம்யூனிஸ்ட் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன். அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ஜோதிராதித்ய சிந்தியாவிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி எம்.பி., வெங்கடேசன், ஒரு மனு அளித்தார்.கோரிக்கைஅதில், ‘மதுரை விமான நிலையத்துக்கு சர்வதேச அந்தஸ்து வழங்க வேண்டும்’ என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

பெரும்பாலான வட மாநிலங்களில் ஒரு சர்வதேச விமான நிலையம் மட்டுமே இருப்பதால், இந்த கோரிக்கையை ஏற்க முடியாது’ என மத்திய அமைச்சர் சிந்தியா கூறியதாக, எம்.பி., வெங்கடேசன் தெரிவித்தார்.

மேலும் கடந்த ஆண்டு 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் செலுத்திய ஜி.எஸ்.டி., தொகையின் மொத்த அளவை விட, அதிக ஜி.எஸ்.டி.,யை தமிழகம் செலுத்தி உள்ளதாக கூறிய எம்.பி., வெங்கடேசன், தமிழகத்திற்காக நான்கு அல்ல; 14 சர்வதேச விமான நிலையங்களை கேட்கவும் எங்களுக்கு உரிமை உள்ளது என்றும் கூறினார்.இந்நிலையில் அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மத்திய அமைச்சர் சிந்தியா நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:உண்மைகளை வெங்கடேசன் மொத்தமாக மாற்றி கூறி உள்ளார். அவரது அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. வட மாநிலமான உத்தர பிரதேசத்திலும், தென் மாநிலமான கேரளாவிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. இது, வெங்கடேசனின் அறிக்கை ஆதாரமற்றது என்பதை வெளிப்படுத்தி உள்ளது. விமான நிலையத்திற்கு சர்வதேச அங்கீகாரம் வழங்குவதற்கு பயணியர் தேவை, அருகில் உள்ள சர்வதேச விமானம் நிலையம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன.மதுரை விமான நிலையத்தில் பல சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அப்படி இருக்கும்போது சர்வதேச அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை எம்.பி., வைத்துள்ளது ஏன் என புரியவில்லை என கூறியுள்ளார் மத்திய அமைச்சர்

Exit mobile version