மணிப்பூரில் பிஜேபி ஆட்சியை கவிழ்க்க நினைத்த ராகுலின் ராஜதந்திரத்தினால் வழக்கம் போல மண்ணை கவ்வியது.

ராஜ்ய சபா தேர்தலை முன் வைத்து
மணிப்பூரில் பிஜேபி ஆட்சியை கவிழ்க்க நினைத்த ராகுலின் ராஜதந்திரத்தினால் கடைசியில் வழக்கம் போல மண்ணை கவ்வியது.

60 உறுப்பினர்கள் உடைய மணிப்பூர் சட்டமன்ற த்தில் காங்கிரஸ் கட்சிக்கு 27
எம்எல்ஏக்களும் பிஜேபிக்கு 21 எம்எல்ஏ க்களும் இருந்தார்கள்.

பிஜேபிக்கு என்பிபி கட்சியின் 4 எம்எல்ஏக்கள்,என்பிஎப் கட்சியின் 4 எம்எல்ஏக்கள்,லோக் ஜன சக்தியின் 1 எம்எல்ஏ,திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 1 எம்எல்ஏ, ஒரு சுயேச்சை எம்எல்ஏ என்று 32 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்ததால் பிஜேபி ஆட்சி அமைத்து 3 வருடமாக பைரேன் சிங் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மணிப்பூரில் உள்ள ஒரே ஒரு ராஜ்ய சபா இடத்தை கைப்பற்றி விட
நினைத்த காங்கிரஸ் பிஜேபி கூட்டணியில் இருந்த என்பிபி கட்சியின் 4 எம்எல்ஏக்களையும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 1 எம்எல்ஏ, சுயேச்சை எம்எல்ஏ
என்று 6 எம்எல்ஏக்களை இழுத்துக் கொண்டது.

இதற்கு பதிலடியாக பிஜேபி காங்கிரஸ் கட்சியில் இருந்து 7 எம்எல்ஏக்களை இழுத்துக் கொண்டது.

அடுத்து காங்கிரஸ் கட்சி பிஜேபி யில் இருந்து 3 எம்எல்ஏக்களை இழுத்துக் கொண்டது. இந்த ஆட்டத்தில் காங்கிரஸ் கை ஓங்கி பிஜேபி ஆட்சி கவிழ்ந்து விடும் என்றே எல்லோரும் நினைத்து வந்தார்கள்.

ஏனென்றால் மணிப்பூர் சட்டமன்ற த்தில் பிஜேபிக்கு இருந்த 32 எம்எல்ஏக்களின் ஆதரவு குறைந்து 23 எம்எல்ஏக்கள் ஆதரவுதான் இருந்தது.

ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு 26 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தது.11 எம்எல்ஏக்கள் பதவி காலியாகி
விட்டதால் 49 எம்எல்ஏக்கள் உடைய மணிப்பூர் சட்டமன்றத்தில் மெஜாரிட்டிக்கு 25 எம்எல்ஏ க்களின் ஆதரவு இருந்தாலே போதும்.

எனவே காங்கிரஸ் கட்சி மணிப்பூர் ராஜ்ய சபாதேர்தலில் வெற்றி பெறுவதோடு ஆட்சியையும் கைப்பற்றி விடும் என்றே
மீடியாக்கள் எழுதி வந்தன. காங்கிரஸ் கட்சியும் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிவந்தது.

இதற்கு முக்கிய காரணம் இன்றைக்கும் மணிப்பூர் அரசியலில் செல்வாக்குடன் இருக்கும் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் ஓக்ராம் இபோபி சிங் தான் .இன்றும் மணிப்பூரில் காங்கிரஸ் கட்சியை உயிரு
டன் வைத்திருக்கும் இவரை விட்டு விட்டு காங்கிரஸ் ஆஹா ராகுலின் ராஜ தந்திரத்தை பாருங்கள் என்று
உளறிக்கொண்டு இருந்தார்கள்

ஆனால் நேற்று நடைபெற்ற ராஜ்ய சபா தேர்தலில் வழக்கம் போல ராகுலின் ராஜதந்திரம் பலித்தது. பிஜேபிக்கு 28 ஓட்டுக்களும் காங்கிரஸ் கட்சிக்கு 24 ஓட்டுக்களும் கிடைத்து இருக்கிறது. பிஜேபியின் வேட்பாளர் சனஜோபாலெய்ஸம்பா
வெற்றி பெற்று இருக்கிறார்.

அனேகமாக பிஜேபிக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ, சுயேச்சை எம்எல்ஏ அதரவோடு பிஜேபியில் இருந்து காங்கிரஸ்
கட்சிக்கு சென்ற 3 எம்எல்ஏக்களும் பிஜேபி க்கு ஆதரவாக வாக்களித்து இருப்பார்கள் என்றே தெரிகிறது.

ஆக 26எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரி வந்த காங்கிரஸ் கடைசியில் ராஜ்ய சபா இடத்தை இழந்ததோடு பிஜேபியின் ஆட்சியை கவிழ்க்க நினைத்த முயற்சியிலும் மண்ணை கவ்வியது.

வழக்கம் போல் ராகுலின் திட்டம் பாரதிய ஜனதா கட்சிக்கு உதவுகின்றது.

கட்டுரை:- வலதுசாரி சிந்தனையாளர் விஜயகுமார் அருணகிரி.

Exit mobile version