ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை தந்தவர் எம்.ஜி.ஆர்… பிரதமர் நரேந்திர மோடி

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் 105 வதுபிறந்த தினம் இன்று . தமிழக மக்களின் என்றும் நெஞ்சில் நிறைந்துள்ளார் எம்.ஜி.ஆர் ஏழைகளின் பாதுகாவலனாக, கொடை வள்ளலாக, தமிழ்நாட்டில் சத்துணவு திட்டம் தந்த சரித்திர நாயகனாகஎன்றென்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்து வருகிறார்பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர்.

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊறிருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கும்
கடமை அது கடமை , கடமை அது கடமை

அந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊறிருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கும்

என்ற பாடல் வரிகளுக்கு ஏற்றார் போல் அவரின் வாழ்க்கை அமைந்துள்ளது

தமிழக மக்களால், மக்கள் திலகம் என்றும், புரட்சித்தலைவர் என்றும் அன்புடன் அழைக்கப்படும் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் இலங்கையில் கண்டி அருகேயுள்ள நாவலப்பிட்டியில் 1917-ம் ஆண்டு ஜனவரி 17-ந்தேதி பிறந்தார். தனது சிறுவயது முதற்கொண்டு நாடகத்தில் நடிக்கத் தொடங்கி, பின்னர் இத்துறையில் நல்ல அனுபவம் பெற்றுத் திரைத்துறைக்குச் சென்றார். அன்றைய காலகட்டத்தில் இவரால் திமுக வெற்றி பெற்றது என்றால் அது மிகையாது.

1969-ல் தி.மு.க.வின் பொருளாளராக, இருந்த எம்.ஜி.ஆர் கட்சி கணக்கு வழக்கை கேட்டதால் நீக்கப்பட்டார் என்ற செய்திகள் உண்டு. பின்னாளில் அ.தி.மு.க. என்கிற தனி இயக்கம் கண்டு, 1972-ம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் பெற்ற வெற்றியினைத் தொடர்ந்து 1977-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறையாக முதல்-அமைச்சர் ஆகப் பொறுப்பேற்றார். 1977 முதல் 1987-ம் ஆண்டுவரை தொடர்ந்து 10 ஆண்டுகள் 3 முறை தமிழகத்தின் முதல்-அமைச்சராகப் பதவி வகித்தார்

எம்.ஜி.ஆரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அந்த செய்தி குறிப்பில் :

பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார். அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன.அவரது திரையுலக பெருந்திறனும் அனைவராலும் போற்றப்படுகிறது!

பிரதமர் திரு.நரேந்திர மோடி

எம்.ஜி ராமச்சந்திரன் ஆட்சி காலத்தில் பல நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. அதில் முக்கியமானதுஇன்றளவும் ஐக்கிய நாடுகள் சபையால் போற்றப்பட்ட சத்துணவுத்திட்டம், தமிழ் மீது கொண்டிருந்த மாறாதப் பற்றின் காரணமாக அவர் நடத்திய 5-ம் உலகத்தமிழ் மாநாடு, 1981-ம் ஆண்டு தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கம், பள்ளி மாணாக்கர்களுக்கு இலவசச் சீருடை, காலணி மற்றும் பற்பொடி வழங்கும் திட்டங்கள், முதியோருக்கு இலவச வேட்டி – சேலை வழங்கிடும் திட்டம், சுயநிதிக் கல்லூரிகளுக்கு அனுமதி ஆகிய குறிப்பிடத்தக்கவை.

Exit mobile version