மத்திய அரசின் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் ! பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே… அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே…..
அனைவருக்கும் வணக்கம்.மக்கள் பழக்கத்தில் உள்ள 100 நாள் வேலைத் திட்டம். இதன் பெயர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம். MNREGA என்று அழைக்கப்படும் Mahatma Gandhi National Rural Employment Guarantee Act ஆகும். முதலில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட இத்திட்டம் பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்று பெயர் மாற்றப்பட்டது.
தமிழக கிராமப்புற மக்கள் 100 நாள் வேலை என்று அழைக்கும் இத்திட்டத்தின் கீழ், பொதுவேலை செய்ய விருப்பம் உள்ள கிராமப்புற வயது வந்தவர்களுக்கு, ஒரு நிதி யாண்டில் 100 நாட்களுக்கு, அரசின் குறைந்த ஊதியத்துடன், உடலுழைப்பு நல்க வாய்ப்பு வழங்கப்படும். இதில் பங்கெடுக்க விரும்பும் நபர்கள், தங்கள் பெயர், வயது மற்றும் முகவரியை கிராம பஞ்சாயத்திடம், புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். கிராம பஞ்சாயத்தார், தகுந்த விசாரணைக்கு பின்னர், நபரை பதிவு செய்து, அவருக்கான, பணி அடையாள அட்டையை வழங்குவார்.
ஒரு நிதியாண்டில் குறைந்தது 100 நாட்களுக்கு குறைவாக வேலை இல்லாது சிரமப்படும் கிராமப்புற மக்களுக்கு இத்திட்டம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது.கிராமங்களை மேம்படுத்த மத்திய அரசின் மகத்தான நோக்கங்கள்• ஊரக ஏழை மக்களின் வேலைக்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும்.• உடல் திறன் மூலம் அந்தந்த கிராமப்புற உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.• ஊரக பகுதி மக்களின் வாழ்வாதாரம் நிலைபெறும்.• தனிநபர் இல்லத்தில் கழிப்பறைகள் உருவாக்கப்பட்டு கிராமப்புறங்கள் சுகாதார மேம்பாடு அடையும்.
ஊரக பகுதிகளில் உள்ள மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும்.• குளம் குட்டைகள் தூர் வாரப்பட்டு, வாய்க்கால்கள் உருவாக்கப்பட்டு, மரங்கள் ஆகியவை நடப்பட்டு இயற்கை வளம் சீரமைத்தல்.தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு என்பது மத்திய அரசின் திட்டம், இந்த திட்டத்திற்குண்டான தொகையை நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் மக்கள் தொகை அடிப்படையில் மத்திய அரசுதான் வழங்குகிறது. ஆனால் சமீபத்தில் திமுகவின் தலைவர் அவர்கள் “உங்கள் தொகுதி முதல்வர் திட்டம்” என்று கூறிக் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் அடைப்படை வசதிகள் செய்து தருகிறோம் என்று சுற்றுப் பயணம் செய்து மனுக்கள் பெற்றார். மக்களிடமிருந்து பெற்ற மனுக்களின் அடிப்படையில் “திட்டங்கள்” தயாரிக்கப்பட்டன. ஆனால் அதற்குண்டான “நிதியை” மாநில அரசு ஒதுக்கவில்லை.
மாறாக “உங்கள் தொகுதி முதல்வர் திட்டங்களை” மத்திய அரசின் நிதியில் செய்யச் சொல்லி, 100 நாள் வேலைத் திட்டத்துடன் இணைத்து விட்டது நம் மாநில அரசு. ஆக செலவு செய்வது மத்திய அரசு. ஆனால் திட்டத்தின் பெயரில் மட்டும் முதல்வர்…மேலும் அந்தத் திட்டங்களை “ஊராட்சி மன்ற தலைவர்களை செய்ய விடாமல்” திமுக கட்சிக்காரர்கள் செய்ய வேண்டும் என்றும் திமுகவினருக்கே காண்டிராக்ட் வேலைகள் கொடுக்க வேண்டும் என்று மாநில அரசு சொல்வது…. மாநில இழுக்கு.
கிராமப்புற ஏழை எளிய மக்களிடம் “இது முதலமைச்சர் கொண்டு வந்த திட்டம் எனவும், தமிழக அரசு இதற்கான நிதியை ஒதுக்கியுள்ளது என்றும் செய்திகளை மாநில அரசு பரப்புவது ஒரு அரசுக்கு அழகல்ல”தேசத்தின் வளர்ச்சி கிராமபுறங்களிலும் அதன் வலிமையான “ஊராட்சி நிர்வாகத்திலும்” உள்ளது என்பதை மறந்துவிட்டு நம் மாநில அரசு அதைத் திறமையாக பயன்படுத்துவதை விட்டு விட்டு அரசியல் ஆதாயத்திற்காக மத்திய அரசின் பணத்தை வீணாக்கிக் கொண்டிருப்பது வருத்திற்குரிய செயல். திமுகவினரின் லாபத்திற்காக செயல்படுவதால் இழப்பு மக்களுக்கே.
நன்றி வணக்கம்அன்புச் சகோதரன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.