புதிய விவசாய மசோதாவால் விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறதா மோடி அரசு ? உண்மை என்ன !

விவசாயிகளுக்கான விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் பண்ணை சேவைகள் சட்டம், 2020 ( அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு ) -ன் சிறப்பம்சங்கள்

இந்த சட்டம் மூலம் இப்போது விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை உற்பத்திசெய்யவும், விற்கவும் மொத்த வியாபாரிகள் ,சில்லறை வியாபாரிகள் அல்லது ஏற்றுமதியாளர்களுடன் நேரடி ஒப்பந்தம் அல்லது வணிக ரீதியான ஒப்பந்தங்களை மேற்கொள்ளலாம்.

ஒரு நிறுவனம் அல்லது வணிகருடன் விளைபொருட்களின் விற்பனை பற்றி முடிவு செய்யப்பட்ட பின்னர், நல்ல பயிர் விளைச்சலுக்கு தேவையான வழிமுறைகளை வழங்குவதற்கு வாங்குபவர் பொறுப்பேற்க வேண்டும்

சரியான விவசாய இயந்திரம் மற்றும் உபகரணங்கள் வாங்குபவரால் ஏற்பாடு செய்யப்படும்

வாங்குபவர் விவசாயிக்கு தொழில்நுட்ப வழிகாட்டுதலையும் ஆலோசனையையும் வழங்குவார், மேலும் பயிர் அபாயங்களுக்கு முழு மற்றும் பகுதியளவு பொறுப்புணர்வை எடுக்க வேண்டும்

உற்பத்தியின் போது பயிர் தொடர்ந்து விவசாயிக்கு சொந்தமானதாக இருக்கும், மேலும் பயிர் காப்பீடு செய்யப்படும், மேலும் தேவைப்பட்டால் விவசாயி நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறவும் முடியும்

ஒப்பந்தத்தின் கீழ் பயிரிடப்பட்ட பயிர் விளைபொருட்களின் விற்பனை தொடர்பான விதிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விதிகள் சட்டங்களிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

இந்த திட்டம் விவசாயிகளுக்கு லாபம் ஈட்டும் திட்டம் நடுவில் உளற இடை தரகர்களுக்கு இந்த திட்டத்தால் பெருத்த நஷ்டம் வரும் மக்களுக்கு நல்ல பயனுள்ள திட்டம்.

Exit mobile version