மோடி காட்டிய அதிரடி ! பணிந்த இங்கிலாந்து! அமைதியான, நிதானமான விவாதம் மூலம் ஒவ்வொரு முடிச்சையும் அவிழ்ப்போம்-இங்கிலாந்து !

உலகம் முழுவதும் சீனாவின் வைரஸ் கொரோனா ஓயாத நிலையில் வெளிநாட்டு பயணங்கள் சிக்கலானதாக மாறியுள்ளது. பல நாடுகளில் இன்னுமும் கொரோனா பிடியிலிருந்து மீளவில்லை. பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்துள்ளது.மக்களுக்கும் செலுத்தி வருகிறது. இருப்பினும் ஓவ்வொரு நாடும் கொரோனா விஷயத்தில் ஒவ்வொரு விதிமுறைகளை பின்பற்றி வருகிறது.

வெளிநாட்டவர்கள் தடுப்பூசி போட்டிருந்தாலும் தங்கள் நாட்டுக்கு வருகை புரிந்தால் பல்வேறு கட்டுப்பாடுகளை வித்துள்ளது. 2 டோஸ்தடுப்பூசி போட்டிருந்தாலும் பிரிட்டன் வரும் இந்தியர்களுக்கு ஆர்.டி – பி.சி.ஆர்., சோதனை, தனிமைப்படுத்தல் போன்ற கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர்.

இந்தியாவிலிருந்து பிரிட்டன் செல்வோர் விமானப் பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு ஒரு ஆர்.டி – பி.சி.ஆர்., பரிசோதனை, பிரிட்டன் சென்று இறங்கியதும் மீண்டும் ஒரு பரிசோதனை 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல், அதில் 8-வது நாள் ஒரு ஆர்.டி – பி.சி.ஆர்., சோதனை செய்து முடிவுகளை சமர்பிக்க வேண்டும் என கட்டுப்பாடுகளை விதித்தது பிரிட்டன் .

இது பயணிகளுக்கு செலவை அதிகரிப்பதோடு, கடும் சிரமத்தையும் உண்டாக்கியது. கோவிஷீல்ட் தடுப்பூசி முழுமையாக போட்டிருந்தாலும் அதனை ஏற்க மறுத்தது பிரிட்டன் பின் இது குறித்து பிரிட்டன் அரசிடம் இந்தியா பேசியது. ஆனால் அதற்கு பிரிட்டன் செவி சாய்க்கவில்லை இது குறித்து பிரதமர் மோடியிடம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பிரிட்டனில் என்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறதோ அதே கட்டுப்பாடுகளை ப்ரிட்டனிலிருந்து வரும் பயணிகளுக்கு விதியுங்கள் என அதிரடியாக தெரிவைத்துள்ளார்.

இந்தியா அதே கட்டுப்பாடுகளை பிரிட்டன் பயணிகளுக்கு இந்தியா அமல்படுத்தியது இந்தியாவுக்கு வரும் பிரிட்டன் பயணிகளுக்கு அவர்கள் பிரிட்டன் பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்திய வம்சாவளியினராகவே இருந்தாலும், விமானம் ஏறுவதற்கு முன்பு ஆர்.டி – பி.சி.ஆர்., பரிசோதனை, வந்திறங்கியதும் பரிசோதனை, 8-வது நாள் பரிசோதனை 10 நாள் கட்டாய தனிமைப்படுத்தல் என அறிவித்தது. அக்., 4லிருந்து அதனை செயல்படுத்தவும் தொடங்கியது.

இந்நிலையில் வியாழனன்று இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் அலெக்ஸ் எல்லிஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அக்டோபர் 11 முதல் கோவிஷீல்ட் அல்லது பிரிட்டனால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை முழுமையாக பெற்ற இந்தியர்களுக்கு தனிமைப்படுத்துதல் கிடையாது.” என கூறியுள்ளார். மேலும் “நிலைமையை புரிந்துகொள்வோம், சிக்கலான விஷயத்தை தீர்ப்போம், அமைதியான, நிதானமான விவாதம் மூலம் ஒவ்வொரு முடிச்சையும் அவிழ்ப்போம்.” என்ற வாசகத்தையும் மேற்கோள் காட்டியுள்ளார்.

Exit mobile version