கேப்டனுக்கு கௌரவம் அளித்த மோடி அரசு.. கேப்டன் விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது..

Padma Bhushan Award

Padma Bhushan Award Padma Bhushan Award

நாளை பாரத குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் களை காட்டியுள்ளது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சிநிறுவனருமான விஜயகாந்துக்கு அவர்களுக்கு பத்மபூஷன் விருது அறிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு.

கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி தேமுதிக நிறுவன தலைவரும் நடிகருமான திரு.விஜயகாந்த் அவர்கள் மறைந்தார், அவரின் மறைவானது தமிழகம் முழுவதும் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லால் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

பிரதமர் மோடி விஜயகாந்திற்கு ஒரு கட்டுரையே எழுதினார் அதில் கேப்டன் என்றே உரைத்தார், கேப்டன் விஜகாந்த்திற்கும் பிரதமர் மோடி அவர்களுக்கும்அரசியலை தாண்டி ஒரு நட்புணர்வு இருந்து கொண்டே வந்தது. விஜயகாந்த் டெல்லியில் பிரதமர் மோடி அவர்களை பார்த்ததும் மோடி அவர்கள் ஆரத்தழுவி கன்னத்தில் தட்டி தனது பாசத்தை காட்டினார். அப்போது விஜயகாந்த் அவர்களுக்கு ஆனந்த கண்ணீரே வந்தது. இந்த நெகிழ்ச்சியான சம்பவம் இன்றும் தமிழக மக்களின் மனதில் நின்று கொண்டிருக்குகிறது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜயகாந்த், தேமுதிக., கட்சியின் தலைவராகவும் திகழ்ந்து, தமிழக அரசியலில் எதிர்கட்சி தலைவராகவும் பொறுப்பு வகித்தார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த டிசசம்பர் 28ல் காலமானார். ஏற்கனவே தமிழக அரசின் விருது உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ள இவர் இப்போது மறைந்த பின்னர் இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷண் விருதை பெற்றுள்ளார்.கலைத்துறையில் சிறந்த சேவையாற்றிதயற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இது பிரதமர் மோடி அவர்களின் நட்பின் அடையாளமாகவே கருதப்படுகிறது.

அதேபோல் கோவையைச் சேர்ந்த வள்ளி ஒயில் கும்மியாட்ட நடனக் கலைஞர் பத்திரப்பனுக்கு (87) பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியமுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடன கலைஞர் வைஜெயந்தி மாலாவிற்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவிக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது

Exit mobile version