மோடியரசின் பல்வேறு முயற்சிகள் மூலம் இயற்கைவழி வேளாண்மை பொருட்களில் இந்தியா முன்னணியில் இருக்கிறது.

கோவிட் 19 பொது ஊரடங்கானது உள்ளூர் அளவில் விளைவிக்கப்படும் காய்கறிகள் மற்றும் மளிகைப்பொருட்கள் உள்ளிட்டவற்றின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தி உள்ளது.  வேளாண்மை துறை உள்ளிட்ட உள்ளூர் அளவிலான உற்பத்திக்கு சுயசார்பு கொண்ட ஆத்ம நிர்பார் இந்தியா ஊக்குவிக்கிறது என்று பேசியதுடன் உள்ளூருக்கு குரல் கொடுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோதி அழைப்பு விடுத்தார். செப்டம்பர் மாதத்தை ஊட்ட சத்து மாதம்-போஷன் மா என கடைபிடித்தோம்.  நுண்ணூட்ட சத்து தாவரங்களுடன் கூடிய சமையலறை தோட்டத்தை பிரபலமடையச் செய்யும் இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. இயற்கை முறையிலான காய்கறிகள் மற்றும் இயற்கை பண்ணை ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வேளாண்மையில் ரசாயனங்கள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் உபயோகிக்காமல் இருப்பதை இயற்கை வழி பண்ணை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் ஆரோக்கியமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதும் மற்றும் எந்தவித உடல்நலக்கோளாறுகளும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது. உலக இயற்கை வழி வேளாண்மை நிலப்பரப்பில் உலக அளவில் இந்தியா 8-வது இடம் வகிக்கிறது. மொத்த உற்பத்தி பொருட்கள் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கிறது.

கரும்பு, தானியங்கள்&சிறுதானியங்கள், பருத்தி, பருப்பு வகைகள், நறுமண & மருத்துவ தாவரங்கள், தேயிலை, காஃபி, பழங்கள், மசாலா பொருட்கள், உலர் பழங்கள், காய்கறிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் உள்ளிட்ட  அனைத்து வகையான உணவுப் பொருட்கள் என 2.75 மெட்ரிக் டன் சான்று பெற்ற இயற்கை வழி பொருட்களை கடந்த ஆண்டு இந்தியா உற்பத்தி செய்தது. வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி அதிகார அமைப்பானது ஏபிஈடிஏ, தேசிய இயற்கை உற்பத்தி திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. இந்த திட்டமானது சான்றமைப்புக்களுக்கு அங்கீகாரம் அளித்தல், இயற்கை வழி வேளாண்மைக்கான தரநிலைகள்,இயற்கை வழி பண்ணை மற்றும் சந்தைப்படுத்துதலை மேம்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.  கடந்த மார்ச் 31ம் தேதியுடன் இந்த திட்டத்தின் கீழ் 3.67 மில்லியன் ஹெக்டேர் பதிவு செய்யப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டில் விவசாயிகள் இயற்கை வழியில் காய்கறிகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை ஊக்கத்தொகை வழங்குகிறது. தமிழகத்தில் காய்கறிகளை பயிர் செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2500 வழங்கப்படுகிறது.

தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், சுரைக்காய், பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்ற காய்கறிகள் விளைவிப்பதற்கு ஊக்கத் தொகை தரப்படுகிறது. திருமதி பத்மா கிரண் என்ற வங்கி அதிகாரி கூறுகையில், தாம் தோட்டப்பணிகளை ரசிப்பதாகவும், சமையலறைத் தோட்டம் தமக்கு புத்துணர்ச்சி அளிப்பதாகவும் கூறினார். பசுமாட்டு சாணத்தை உரமாக உபயோகிப்பதாகவும் மற்றும் எந்தவித ரசாயண உரங்களையோ அல்லது பூச்சிக்கொல்லிகளையோ உபயோகிப்பதில்லை என்று கூறினார்.

தோட்டக்கலைத்துறையில் இருந்து வெண்டைக்காய். பாகற்காய் போன்றவற்றுக்கான விதைகள் பெறுவதாக கூறினார்.  திருமதி அறிவுச்சுடர் கூறுகையில், தமது மாடிப் பகுதியை இயற்கை வழி பண்ணைக்காக உபயோகிப்பதாக கூறினார். தமது வீட்டின் புழக்கடையில் அமைத்துள்ள தோட்டத்தில் சமைப்பதற்கான காய்கறித் தேவைகளைப் பெறுவதாக கூறினார்.

ஸ்ரீரங்கம் மேலூர் பழத்தோட்டத்தில் உள்ள மா விவசாயிகள் உலர்ந்த இலைகள் மற்றும் இயற்கை உரங்களை உபயோகித்து இயற்கை முறையில் மா மரங்களை வளர்த்து வருகின்றனர். தொடர்ந்து வருகை தரும் வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த மாங்காய்களுக்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. உள்ளூர் விவசாயிகள் விளைவிக்கும் இயற்கை முறையிலான காய்கறிகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. இலைகாய்கறிகள் குறிப்பாக கீரைகள் மற்றும் பசலைக்கீரை போன்றவற்றை கிராம்பபுறங்களில் இருந்து வரும் பெண்கள் நகர்புறங்களில் விற்பனை செய்கின்றனர்.

கிராமங்களில் வேப்பம் இலைகள் இயற்கை பூச்சிக்கொல்லியாக உபயோகிக்கப்படுகின்றன. மண்ணில் நுண்ணூட்டசத்து அதிமாக உருவாக, மண்புழு உரக்குழிகளை அமைக்க வேளாண்மை துறை ஊக்குவிக்கிறது. இயற்கை வழி பண்ணையில் இருந்து கிடைக்கும் நல்ல பயன் என்பது, நமது வீட்டின் புழக்கடையில் சுகாதாரமான ஆரோக்கியமான உணவு கிடைப்பதாக இருக்கிறது.

கோவிட் 19- பெருந்தொற்று பொது ஊரடங்கின் போது பல நகர் பகுதிகள் காய்கறிப் பற்றாக்குறையை நோக்கிச் சென்றது. திருச்சியில், அருகில் உள்ள கிராமங்களில் தங்கள் நிலங்களில் விளைவித்த புதிய இலை வகைகாய்கறிகளை கொண்டுவந்து விற்பனை செய்தனர். இயற்கை பண்ணை முறை, சமூகத்தின் சுய நோய் எதிர்ப்புத்திறனை வலுப்படுத்த உதவும் நுண்ணூட்ட சத்துகள் மற்றும்இயற்கை உணவை நிச்சயமாக உறுதி செய்கிறது.  பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயனங்கள் ஆகியவற்றில் இருந்து மாசுபடுவதில் இருந்து இயற்கை எனும் தாயை பாதுகாக்கவும் உதவுகிறது.

Exit mobile version