மோடி அரசின் இளைஞர்களிக்கான ASEEM திட்டத்தின் பயன் என்ன ?

ஊழியர்-முதலாளி, தேவை- வழங்கல் தகவல் திரட்டு இணைய முகப்பு ASEEM

விசேஷத் திறன் கொண்ட தொழிலாளர்கள் சந்தையில் தேவை- வழங்கல் இடைவெளியை சமன் செய்வதற்கும் தகவல் அளித்தலை மேம்படுத்தும் முயற்சியாகவும் திறன் மேம்பாடு தொழில் முனைவோர் ( MSDE ) அமைச்சகம் ஜூலை 10ந் தேதியன்று ‘ சுயசார்பு விசேஷத் திறன் கொண்ட ஊழியர்-முதலாளி தகவல்திரட்டு ( ASEEM ) என்ற பெயரில் இணைய முகப்பு ( வெப் போர்ட்டல் ) ஒன்றை துவக்கியுள்ளது. விசேஷத் திறன் கொண்ட தொழிலாளர்கள், நிலையான வாழ்வாதார
வாய்ப்புக்களை பெற இது உதவும்.

விசேஷத்திறன் கொண்ட தொழிலாளர்களை பணியமர்த்தி அதன் மூலம் வணிகப்போட்டி மற்றும்
பொருளாதார வளர்ச்சியை உருவாக்கவும் மட்டுமின்றி செயற்கை நுண்ணறிவு நடைமேடை
,தொழிலாளர்களின் தொழிற்நிலையை பலப்படுத்தவும், புதிதாக உருவாகி வரும் வாய்ப்புகளை
கண்டறிந்து உதவவும் வழிவகை செய்ய பயன்படும்
.
இந்த இணைய முகப்பு, எந்தெந்த பகுதியில் வேலைக்கு ஆட்கள் இருக்கிறார்கள், உள்ளூர் தொழில்
தேவைக்கான தகுதி உடையவர்கள் இருக்கிறார்கள் என்பதை தெரிவிக்கும்.
பல்வேறு மாநிலங்களிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து ‘ வந்தே
பாரத் ‘ திட்டம் மூலம் நாடு திரும்பி SWADES திறன் அட்டையை பூர்த்தி செய்தவர்கள் பற்றிய
பட்டியல் , இந்த ASEEM இணைய முகப்போடு இணைக்கப்பட்டிருக்கிறது.

பல்வேறு மாநில-மத்திய திறன் வளர்க்கும் திட்டங்கள் மூலம் Skill India இணைய முகப்பிற்கு
வரும் தொழிலாளர்கள் பற்றிய தகவல்கள்,PMKVY, Fee based programs, National Livelihoods
Mission, Deen Dayal Upadhyaya Grameen Kaushalya Yojana மற்றும் Seekho aur Kamao
ஆகியவற்றோடு இணைக்கப்படும்

Exit mobile version