பெண்களின் திருமண வயதில் மாற்றம் ! அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் விரைவில் சட்டம் !

பிரதமர் மோடி தலையாமையிலான பாஜக அரசு பதவி ஏற்றபின் நாட்டில் மக்களின் நலனிற்காக பல்வேறு சட்டங்களை மாற்றிவருகின்றது,இதன் தொடர்ச்சியாக தற்பொழுது,

நாட்டில் முக்கிய சீர்திருத்தங்கள் தொடர்பான மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் முதல் பெரிய முன்னேற்றம் பெண்களின் திருமண வயது தொடர்பானது. பிரதமர் மோடியின் ஆட்சிக் காலத்தில் திருமணம் தொடர்பான இரண்டாவது பெரிய  முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு, அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் சட்டமாக உருவெடுக்கும். 

இதற்கு முன்னதாக, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான திருமணங்களை 30 நாட்களுக்குள் பதிவு செய்வது தொடர்பாக அமைச்சரவை பெரிய முடிவை எடுத்துள்ளது. இந்தியாவில் 18 முதல் 21 வயதுக்குள் திருமணம் செய்யப்படும் பெண்களின் எண்ணிக்கை சுமார் 16 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. 

2006ஆம் ஆண்டின் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின்படி, குறைந்தபட்ச வயதுக்கு கீழ் உள்ள ஆண் அல்லது ஒரு பெண்ணை திருமணம் செய்து வைப்பவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

ஆண் மற்றும் பெண் என இரு பாலர்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை 21 வயதாக மாற்றும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Exit mobile version