மோடி அரசின் அடுத்த அதிரடி ரஷ்யாவுடன் இணைந்து AK 203 துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல்!

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டு ஆயுத தயாரிப்பில் காணும் முன்னேற்றங்கள்.மோடி அரசு செய்த பல சீர் திருத்தங்கள் பலனளிக்க தொடங்கிவிட்டன, முதற்கட்டமாக மேக் இன் இந்தியா திட்டத்தில் இந்திய ராணுவ தயாரிப்பு தனியாருக்கு கொடுக்கபட்டதன் பலனாக முதல் தனியார் ஆயுதமாக பினாகா ராக்கெட்டுகள் வெற்றிகரமாக சோதிக்கபட்டிருக்கின்றன‌.இதன் தொடர்ச்சியாக தற்பொழுது…

எல்லை பாதுகாப்பிற்காக இந்திய ராணுவ வீரர்கள் கடந்த 30 ஆண்டுகளாக INSAS (India Small Arms System) துப்பாக்கிகளை பயன்படுத்தி வந்தனர். இந்த வகை துப்பாக்கிகள் திருச்சி, கான்பூர் மற்றும் மேற்கு வங்கத்தின் இச்சாபூர் ஆகிய இடங்களில் தயாரிக்கப்பட்டு வந்தன. இந்த துப்பாக்கிகளை பயன்படுத்தும் போது வீரர்கள் ஏராளமான பிரச்னைகளை எதிர்கொண்டு வந்தனர். கார்கில் போரின் போதும் INSAS துப்பாக்கிகள் ஜாம் ஆவதாக புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து ராணுவ வீரர்கள் A-47 ரக துப்பாக்கிகளை பயன்படுத்த தொடங்கினர்.

இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் INSAS துப்பாக்கிக்கு பதிலாக AK-203 துப்பாக்கிகளை பயன்படுத்த இந்திய இராணுவம் முடிவெடுத்தது. இது தொடர்பான முதல் அறிவிப்பு 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு வெளியிட்டது. ஆனால் AK-203 துப்பாக்கிகளின் விலையினாலும், தொழில்நுட்ப பரிமாற்றத்தினாலும் இந்த ஒப்பந்தம் நிலுவையில் இருந்தது.

பிறகு ரஷ்யா விலையை சிறிதளவு குறைத்ததால் உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் AK-203 துப்பாக்கிகளை தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அமேதியின் கோர்வாவில் உள்ள Advanced Weapons and Equipment India நிறுவனத்தில் ரஷ்யாவின் ரோசோபோரோனெக்ஸ்போர்ட் (Rosoboronexport) நிறுவனத்துடன் இணைந்து ஐந்தாயிரம் கோடி ரூபாய் செலவில் 5 லட்சம் துப்பாக்கிகள் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பும், சிறு குறு நிறுவனங்களுக்கு மூலப்பொருள் விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தமும் கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு நாடுகளிடையே ராணுவம் மற்றும் தொழில்நுட்ப துறையில் ஒத்துழைப்பு ஒப்பந்தம் 2021- 2031 ஆம் ஆண்டு வரை, அதாவது 10 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.

மிக துல்லியமான முறையில் இலக்கை குறி வைப்பதற்கும், அதிக அளவிலான தீவிரவாத தாக்குதல்களை சமாளிப்பதற்கும் AK-203 துப்பாக்கிகளை இந்திய இராணுவம் தேர்ந்தெடுத்துள்ளது. AK-203 துப்பாக்கிகள் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. வசதிக்கு ஏற்ப சரிசெய்யக்கூடிய ஃபாஸ்ட் டேக், சிறந்த பிடிமானம் மிக துல்லியமாக இலக்கை குறி வைக்கும் திறன் ஆகிய அம்சங்கள் இதில் உள்ளன.

AK-203 ரக துப்பாக்கிகள் INSAS துப்பாக்கிகளை விடவும் எடை குறைவானவை, தோற்றத்தில் சிறியவை. மேகசின் மற்றும் பயோனெட் இல்லாமல் INSAS துப்பாக்கியின் எடை 4 புள்ளி 15 கிலோ ஆகும். ஆனால் AK-203 துப்பாக்கிகளின் எடை 3.8 கிலோ மட்டுமே. INSAS துப்பாக்கியின் நீளம் 960 mm ஆகும். AK-203 துப்பாக்கியின் நீளம் வெறும் 705 mm தான். INSAS துப்பாக்கியில் 20 குண்டுகளையும் AK-203 துப்பாக்கியில் 30 குண்டுகளையும் பொறுத்த முடியும். INSAS துப்பாக்கியின் குறி வைக்கும் தொலைவு 400 மீட்டர் மட்டுமே. ஆனால் AK-203 துப்பாக்கியில் 800 மீட்டர் தொலைவில் உள்ள இலக்கையும் குறி வைக்கலாம்.

Exit mobile version