பிரதமர் மோடியின் கைகளில் நேபாளத்தின் ஆட்சி.

நேபாளத்தில் நடைபெற்று வரும் அரசியல் மாற்றங்களை பார்க்கும் பொழுது விரைவில் மோடியின் கைகளில் நேபாளத்தின் ஆட்சி இருக்கும் என்று உறுதி யாக கூறலாம்

ஒரு வழியாக இந்தியாவுடன் வம்பு வளர் த்த நேபாள பிரதமர் ஷர்மா ஒளி நேபாள நாடாளுமன்றத்தை கலைக்கும் படி ஜனாதிபதியிடம் பரிந்துரைக்க நேபாள
நாடாளுமன்றம் கவைக்கப்பட்டு விட்டது.

இனி அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற இருக்கிற து.

ஷர்மா ஒளியின் நேபாள ஒருங்கிணை ந்த லெனினிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியும் பிரசந்தாவின் மாவோயி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒன்றிணை ந்து கடந்த 2017 டிசம்பரில் நடைபெற்ற நேபாள பொதுத்தேர்தலில் போட்டியிட்டு
அமோக வெற்றி பெற்றதால் கம்யூனிஸ்ட் அரசாங்கம் அமைந்தது.

கம்யூனிசம் என்றால் தேனும் பாலும் ஓடும் என்று எதிர்பார்த்த நேபாள மக்கள் கம்யூனிசம் என்றால் குழப்பம் போராட்டம் வாழ்க்கை அழிதல் என்பதை கடந்த 10 ஆண்டுகளில் நன்றாக தெரிந்து கொண்டார்கள்.அதனால் இனி கம்யூனிஸ்ட் அரசு நேபாளத்தில் அமையாது.

1994 ல் நேபாளத்தில் முதல் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைந்தது.ஒருங்கிணைந்த மா ர்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ககம்யூனிஸ்ட் க ட்சியை சேர்ந்த மன்மோகன் அதிகாரி
என்பவர் தான் நேபாளத்தில் முதல் கம்யூனிஸ்ட் பிரதமர். இந்த அதிகாரி என்கிற
வார்த்தை இப்பொழுது மேற்கு வங்காள த்தில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து சுவேந்து அதிகாரி விலகி பிஜேபியில் இணைந்ததால் இந்திய அரசியலில் மிக பிரபலமாகி இருக்கிறது.

இந்த அதிகாரி என்கிற வார்த்தை நேபா ளம் மேற்கு வங்காளம் பீகாரில் வாழ்ந்து வரும் ஒரு இனத்தை குறிக்கும் வார்த்தை .

அந்த வகையில் நேபாளத்தின் முதல் கம்யூனிஸ்ட் பிரதமரான மன்மோகன் அதிகாரி நிச்சயமாக சுவேந்து அதிகாரிக்கு சொந்தமாகவே இருப்பார்.

1994 ல் நேபாளத்தில் முதன்முதலாக அமைந்த கம்யூனிஸ்ட் அரசு ஒரு வருடத்தி
லேயே காணாமல் போனது. அதற்கு பிறகு மீண்டும் நேபாள காங்கிரஸ் கட்சி தான் ஆண்டு வந்தது.

என்ன தான் நேபா ளத்தில் பிரதமர் தேர்தல் மக்களாட்சி என்று இருந்தாலும் நேபாள மன்னர் வை த்தது தான் சட்டமாக இருந்தது.

நேபாளம் தான் உலகின் ஒரேஒரு இந்துநாடாக அறியப்பட்ட நாடு.இதற்கு கார ணம் என்னவென்றால் நேபாள மன்னர்
கள் தான் காரணம்.1768 ல் இருந்து 2008 வரை நேபாளத்தை ஆண்டு வந்த

ஷா வம்சத்தின் மன்னர்கள் நேபாளத்தை இந்து நாடாக உலகம் அறிய வைத்து இருதார்கள்.

நேபாளத்தின் தேசிய கடவுளானபசுபதி நாதரும் உலகினை காக்கும் முக்திநாத ரும் தான் இந்தியாவுக்கும் நேபாளத்தின்கும் இடையே உள்ள இணைப்பு சங்கிலி ராமர் பிறந்த பூமி இந்தியா என்றால் சீதா தேவி பிறந்த பூமி ஜனக்பூர் ஆகும்

சீதா தேவியின் தந்தையான ஜனகரின் பெயர் கொண்ட இந்த ஜனக்பூர் நேபாள த்தில் தான் இருக்கிறது.ராமரின் மனை வி சீதா தேவிக்குஜானகி தேவி ஆலயம் என்கிற பெயரில்மிகப்பெரிய கோயிலையே நேபாள அரசாங்கம் கட்டி இருக்கிறது.

இப்படி ராமர் சீதை மாதிரி கணவன் ம னைவி உறவுடன் இருந்த இந்தியா நேபாள உறவை சீர்குலைக்க சீனா உருவா க்கி விட்டது தான் நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.உலகம் முழுவதும் மன்னர் ஆட்சி வீழ்ந்தாலும் நேபாளத்தில்
கொண்டாடப்பட்டே வந்தது.

இதற்கு முற்று புள்ளி வைத்தது 2001 ல் மன்னர் குடும்பத்தில் நடை பெற்ற கொலைகள் தான்.இளவரசர் தீபேந்திரா தன்னுடைய தந்தையான மன்னர் பிரே ந்திரா தாய் என்று வரிசையாக 11 பேரை ஏன் சுட்டுக் கொன்றார்? பிறகு எதற்காக
தற்கொலை செய்து கொண்டார்? என்பது இது

வரை விடை தெரியாதகேள்விகள்

ஏனென்றால் பிரேந்திராவுக்கு சீனாவைபிடிக்கவே பிடிக்காது அவருடைய அப்பா வான மகேந்திராவுக்கு சோவியத் யூனியனை பிடிக்காது. இப்படி நேபாள மன்னர்கள் கம்யூனிச அரசியலுக்கு எதிரியாகவும் இந்தியாவுக்கு தலை வணங்கியும் இருந்த பொழுது மன்னர் ஆட்சியை ஒழித்து

மாவோயிஸ்ட் களின் கைகளில் நேபாளத்தை அளிக்க சீனா நடத்திய சதி திட்டம்
தான் 2001ல் நேபாள அரசு குடும்பத்தில் நடைபெற்ற படு கொலைகள்.

அதற்கு பிறகு நேபாளத்தில் மாவோயி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துணையுடன் நடைபெற்ற போராட்டங்கள் மன்னர் ஆ ட்சியை 2008ல் முடிவுக்கு கொண்டு வந்தது.2008 ல் ஆட்சிக்கு வந்த மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேபாளம் இனி இந்து நாடு கிடையாது என்று அறிவித்தது.

நேபாளம் ஒரு மத சார்பற்ற நாடு என்று அறிவிக்க ப்பட்டு மத மாற்றங்கள் ஊக்கு
வைக்கப்பட்டது.மன்னர் ஆட்சி் முடிந்து நேபாளம் குடியரசு நாடாகிய 12 வருடங்களில் நேபாளம் 10 பிரதமர்களை சந்தித்து இருக்கிறது .இதில் இருந்தே கமயூனிசத்தின் லட்சணத்தை அறிந்து கொள்ள முடியும்.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் கேபி ஷர்மா ஒளிக்கும் மாவோ யிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பிரசந்தாவுக்கும் அடி தடி தான் நடைபெறவில்லை
ஒரு வேளை நடைபெற்று இருக்கலாம். யார் கண்டது?

மோடி நேபாள அரசியலில் இப்பொழுது அற்புதமான ஒரு மூவை நகர்த்தி இருக்கிறார். அதாவது கம்யூனிஸ்ட் கட்சிகளை
உடைக்கும் வேலையை செய்து வருகிறா ர்.ஏனென்றால் கம்யூனிஸ்ட் கட்சிகளின்
ஆதிக்கம் இன்றி இனி நேபாளத்தில் எந்த ஒரு ஆட்சியும் அமைய முடியாது.

இதனால் இனி நேபாளத்தில் எந்த ஒருஆட்சி. அமைந்தாலும் நேபாள கம்யூனி ஸ்ட் கட்சிகளான ஷர்மாஒளியின் ஒரு ங்கிணைந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் ஆதரவு அல்லது பிரசந்தாவின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துணையின்றி ஆட்சி அமைக்க முடியாது.

அந்த அளவிற்கு நேபாள அரசியலில் கம்யூனிஸ்ட்கள் வலுவாக இருக்கிறார்கள்.
நேபாள கம்யூனிஸ்ட் கட்சிகளின் துணையுடன் அமையும் எந்த ஒரு ஆட்சியும் சீனாவுடன் கொள்கை ரீதியாக கைகோர்த்து கொள்ளும்.

அதனால் கம்யூனிஸ்ட் கட்சிகளை உடை த்து அவர்களை நேபாள அரசியலில் பலவீனமாக்கினால் தான் இந்தியாவுக்கு சாதகமான ஒரு ஆட்சியை நேபாளத்தில் உருவாக்க முடியும் என்று நினைத்த மோ டி மிக அற்புதமாக இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே மோதலை உருவாக்கி அவர்களிடையே நிரந்தர பிளவை உருவாக்கி விட்டார்.

அடுத்து வருவது எந்த ஆட்சியாக இரு ந்தாலும் அதில் இந்தியாவின் ஆதிக்கம் வலுவாக இருக்க வேண்டும் இந்தியர்க ளின் கைகளில் நேபாளத்தின் அதிகாரம் இருக்க வேண்டும் என்று மோடி நினை க்கிறார்.

அதனால் தான் இது வரை திசைக்கு ஒரு பக்கமாகஅரசியல் செய்து வந்த இந்திய வம்சாவளியினர்களான மாதேசிகளின் அரசியல் கட்சிகளான சமாஜ்வாடி பார்ட்டி மற்றும் ராஷ்டிரியஜனதா பார்ட்டி ஆப் நேபாள் மற்றும் நேபாள் சத்பவன பார்ட்டி தாரை மாதேசி லோக் தந்திரிக் பார்ட்டி

என்கிற கட்சிகளை ஒன்றிணைத்து ஜனதா சமாஜ்வாடி பார்ட்டி என்கிற புதிய க ட்சியை கட்சியை உபேந்திரா யாதவ் தலைமையில் உருவாக்கி இருக்கிறார்

இதன் மூலமாக நேபாள பாராளுமன்ற த்தில் அதிக உறுப்பினர்களை கொண்ட
கட்சி என்கிற அடிப்படையில் இந்தியாவி ன் வம்சாவளியினர்களின் அரசியல் பிர திநிதிகள் மூன்றாவது இடத்திற்கு வந்து விட்டார்கள்

ஏற்கனவே நேபாள காங்கிரஸ் இப்பொழு இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கிற து.நேபாள கம்யூனிஸ்ட் கட்சிகளான ஷர் மா ஒளியின் ஒருங்கிணைந்த மார்க்சி ஸ்ட் லெனினிஸ்ட் கட்சியும் பிரசாந்தா வி ன் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்
இனி வருகின்ற தேர்தலில் நிச்சயமாக ஒன்று சேர மாட்டார்கள் சேர முடியாது.

இதனால் வருகின்ற நேபாள நாடாளு மன்ற தேர்தலில் நேபாள காங்கிரஸ்கட்சி தான் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும். கூடவே இந்தியாவின் வம்சாவளியின ர்களின் கட்சியான ஜனதா சமாஜ்வாடி கட்சியும் ஆட்சியில் பங்கேற்கும்.

அது முழு அளவில் இந்தியாவின் ஆட்சியாகவே இருக்கும். அதாவது மோடி யின் ஆட்சியாகவே இருக்கும். அப்பொழுது நேபாளம் மீண்டும் அரசியல் சாசனத்தை திருத்தி இந்து நாடாக அறிவித்து அத னை மோடியின் கைகளில் அளிக்கும்.

கட்டுரை :-எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி

Exit mobile version