Wednesday, May 21, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home மற்றவைகள்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு குறித்த மோடியரசு முக்கிய அறிவிப்பு.

Oredesam by Oredesam
September 18, 2020
in மற்றவைகள்
0
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு குறித்த மோடியரசு முக்கிய அறிவிப்பு.
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத்தின் மக்களவையில் பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு கிரண் ரிஜிஜூ, கீழ்க்கண்ட தகவல்களை அளித்தார். 

விளையாடு இந்தியா திட்டத்தின் கீழ் கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் 400 மீட்டர் நீளம் கொண்ட செயற்கை தளத்தை ரூ 7 கோடியில் அமைப்பதற்கான கருத்துருவை திட்ட மதிப்பிடுதல் குழு பரிந்துரை செய்தது. ஒப்புதலுக்காக இது அடுத்த கட்டத்துக்கு செல்லவுள்ளது.

READ ALSO

இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் அதிரடி! மற்றவர்களை ஏற அனுமதிக்காத ரயில்வே பெட்டி! அதிரடி காட்டிய நீதிபதி!

நண்பேன்டா! களத்தில் இறங்கிய ரஷ்யா போர்க் கப்பல்! அலறும் அரபிகடல்! பதறும் பாகிஸ்தான்! துருக்கியாவது …..

விளையாடு இந்தியா திட்டத்தின் கீழும், ஒரே இந்தியா, ஒப்பற்ற இந்தியா திட்டத்தின் மூலமும் உள்நாட்டு/பழங்குடியினர் விளையாட்டுகளை அமைச்சகம் ஊக்கப்படுத்தி வருகிறது. மேலும், வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் உதவித் தொகை மற்றும் விருதுகள் வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது.

கபடி விளையாட்டை ஊக்குவிப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 126 கபடி வீரர்கள் திறன் கண்டறிதல் திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்திய விளையாட்டு ஆணையத்தின் மையங்களில் கபடி வீரர்களுக்கு பயிற்சி அளிகப்படுகிறது.

தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளின் மூலம் விளையாட்டுகளுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. 2019-20-இல் நிதியுதவிக்காக ரூ 300.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், 2020-21-இல் ரூ 245 கோடி செய்யப்பட்டுள்ளது.

கொவிட்-19 பெருந்தொற்றின் போது வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் நலன் கருதி இணைய வழி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. கருத்தரங்கங்களும், பயிற்சி பட்டறைகளும் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டன.

விளையாட்டு மாநில பிரிவில் இருந்தாலும், இந்தத் துறையில் மத்திய அரசு பல்வேறு வகைகளில் மாநிலங்களுக்கு உதவி புரிகிறது. விளையாடு இந்தியா திட்டத்தின் கீழ் 2932 வீரர்களும், இந்திய விளையாட்டு ஆணைய திட்டங்களின் கீழ் 10248 வீரர்களும் தொடர் பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கோவாவில் 2020 அக்டோபர் 20 முதல் 2020 நவம்பர் 4 வரை நடக்கவிருந்த 36-வது தேசிய விளையாட்டு போட்டிகள் கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளன. விளையாட்டு உள்கட்டமைப்புக்காக கோவா அரசுக்கு ரூ 97.80 கோடி மத்திய நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய போதை மருந்து பரிசோதனை ஆய்வகம் ஆய்வகங்களுக்கான சர்வதேச தரநிலைகள் மற்றும் உலகளாவிய போதை மருந்துத் தடுப்பு முகமையின் தேவைகளை பூர்த்தி செய்து, இது தொடர்பான அறிக்கையை உலகளாவிய போதை மருந்துத் தடுப்பு முகமையிடம் 2020 ஆகஸ்ட் 29 அன்று சமர்ப்பித்திருக்கிறது.

தேசிய விளையாட்டு விருதுகளுக்கான பரிசுத் தொகையை அரசு சமீபத்தில் அதிகரித்துள்ளது. ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கான பரிசுத்தொகை ரூ 7.5 லட்சத்தில் இருந்து ரூ 25 லட்சமாகவும், துரோணாச்சார்யா விருதுக்கான (பொது) பரிசுத்தொகை ரூ 5 லட்சத்தில் இருந்து ரூ 10 லட்சமாகவும், துரோணாச்சார்யா விருதுக்கான (வாழ்நாள் பிரிவு) பரிசுத்தொகை ரூ 5 லட்சத்தில் இருந்து ரூ 15 லட்சமாகவும், அர்ஜுனா விருதுக்கான பரிசுத்தொகை ரூ 5 லட்சத்தில் இருந்து ரூ 15 லட்சமாகவும், தியான் சந்த் விருதுக்கான பரிசுத்தொகை ரூ 5 லட்சத்தில் இருந்து ரூ 10 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

ShareTweetSendShare

Related Posts

supreme-court
மற்றவைகள்

இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் அதிரடி! மற்றவர்களை ஏற அனுமதிக்காத ரயில்வே பெட்டி! அதிரடி காட்டிய நீதிபதி!

May 7, 2025
Krivak_III
மற்றவைகள்

நண்பேன்டா! களத்தில் இறங்கிய ரஷ்யா போர்க் கப்பல்! அலறும் அரபிகடல்! பதறும் பாகிஸ்தான்! துருக்கியாவது …..

May 6, 2025
நியாயவிலைக் கடை பணியாளர்கள் போராட்டம் திமுக அரசின் கையாலாகாத்தனம்-பார்க்கவகுல முன்னேற்ற சங்க மாநில பொருளாளர் கண்டனம் !
மற்றவைகள்

நியாயவிலைக் கடை பணியாளர்கள் போராட்டம் திமுக அரசின் கையாலாகாத்தனம்-பார்க்கவகுல முன்னேற்ற சங்க மாநில பொருளாளர் கண்டனம் !

April 22, 2025
GetoutStalin
மற்றவைகள்

ஒரு மில்லியனை கடந்த கெட் அவுட் ஸ்டாலின் … மாஸ் காட்டிய பாஜக.. தெறித்து ஓடிய திமுக…. #GetOutStalin

February 21, 2025
Rekha Gupta
மற்றவைகள்

டெல்லி முதல்வராக பதவியேற்றார் ரேகா குப்தா… மோடி சொன்ன வார்த்தை …. ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பி பார்த்தது… யார் இந்த ரேகா குப்தா

February 20, 2025
Annamalai
மற்றவைகள்

மாணவி பாலியல் வழக்கு குற்றவாளி ஞானசேகரன் குறித்த புதிய ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை

December 28, 2024

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

களம் இறங்கியது பா.ஜ.க அடிபணிந்தது தி.மு.க! எல்லா நாட்களும் கோயில்களை திறக்க திமுக அரசு அனுமதி!

திராவிடர் கழக மாநாட்டை தடை பாஜக அதிரடி…

August 31, 2022

மசூதிகளில் இனி ஓலிபெருக்கி மூலம் ஓதகூடாது உயர்நீதிமன்றம் அதிரடி.

May 16, 2020
மஹாராஷ்டிராவில் சிவசேனா எம்பி ராஜினாமா கூட்டணிக்குள் சலசப்பு ! சிவசேனாவின் கூடாரம் காலியாகிறது !

சிவசேனாவின் காலம் முடிவடையும் நேரம் வந்துவிட்டது .

November 5, 2020
முயன்றார் முடித்தார் பா.ஜ.க தலைவர் முருகன்!

முயன்றார் முடித்தார் பா.ஜ.க தலைவர் முருகன்!

August 19, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இந்தியாவின் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலனுக்காகவே பிரதமர் மோடி பெருமிதம்
  • தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட டிரம்ப்! அமெரிக்கா கட்டுப்பாட்டில் ஏர்பேசைதட்டி தூக்கும் இந்தியா !
  • இந்தியாவின் அதிரடி! உருவானதா புதிய நாடு! சுக்குநூறானது பாகிஸ்தான் ! மொத்தமாக முடிந்தது! கதம் கதம்!
  • பாகிஸ்தான் தான் பிடிக்குமா? துருக்கியை தூக்கி எறிந்த இந்தியர்கள்! அதோ கதியில் அஜர்பைஜான்! பிச்சை எடுக்க ரெடியான நாடுகள்!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x