ஏழைகளுகளின் முன்னேற்றத்திற்கு உழைக்கும் கட்சி பாஜக – பிரதமர் மோடி .

ஏழைகளுகளின் முன்னேற்றத்திற்கு உழைக்கும் கட்சி பாஜக என பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். 
உத்தரபிரதேச மாநிலத்தில், 11 மாவட்டங்களை உள்ளடக்கிய 69 சட்டமன்ற தொகுதிகளுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு வருகிற ஞாயிறன்று நடைபெற உள்ளது. இதற்காக உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில், பிரதமர் நரேந்திர மோடி வாக்கு சேகரித்தார்.

பிரசார கூட்டத்தில் பேசிய அவர், உத்திரபிரதேச மக்களின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சிக்கு வேகத்தை அளிப்பதாக கூறினார். உத்திரப்பிரதேச மக்களின் திறன் இந்திய மக்களின் திறனை மேம்படுத்துகிறது என குறிப்பிட்டார். பல சகாப்தங்களாக வாரிசு அரசியல் செய்து வரும் அரசியல் கட்சியினர் உத்தரபிரதேச மாநில அரசின் திறனுக்கு உரிய நீதியை வழங்கவில்லை என பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

முன்பு ஆட்சி செய்தவர்கள், ஏழைகள் எப்போதும் தங்கள் காலடியில் கிடக்க வேண்டும் என நினைத்தாகவும், ஆனால் பாஜக ஏழைகள் மீது அக்கறை கொண்டு பிரச்சனைகளை தீர்ப்பதாக தெரிவித்தார். இதனால் தான், ஒவ்வொரு கட்ட தேர்தல் வாக்குப்பதிவிலும் ஏழைகள் பாரதிய ஜனதா கட்சிக்கு துணையாக வாக்களித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 

Exit mobile version