மோடி செய்த மாஸ் சம்பவம்.. டொனால்டு டிரம்ப் முதல் கையெழுத்து இதுதான் ! சீனாவுக்கு வேட்டு.. கனடாவுக்கு செக்..

அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டு உள்ள டொனால்டு டிரம்ப் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இந்த நிலையில் டிரம்ப் ஆட்சிக்கு வந்த பின்பு உடனடியாக 3 நாடுகள் மீது விரி விதிக்கப்போவதாக அறிவித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. . டிரம்ப் சீனா மீது வரி விதிப்பது அனைவரும் எதிர்பார்த்த ஒன்றாக இருந்தாலும் இந்த பட்டியலில் மெக்சிகோ மற்றும் கனடா ஆகியவை இணைந்துள்ளது கனடாவை இணைத்தற்கு காரணம் மோடி தான் என்கிறார்கள்

டொனால்டு டிரம்ப் சமுக வலைத்தளத்தில் செய்த பதிவின் படி, தான் ஆட்சிக்கு வந்த உடனே மெக்சிகோ மற்றும் கனடா நாட்டின் இறக்குமதி பொருட்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்பட உள்ளதாகவும், சீனா மீதும் சீன பொருட்கள் மீதும் 25 சதவீத வரியுடன் கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதேவேளையில் இந்த பட்டியலில் இந்தியாவை டொனால்டு டிரம்ப் சேர்க்கவில்லை , டிரம்ப் தனது தேர்தல் பிரச்சார காலத்தில் மோடி உடனான நட்பை பாராட்டி இந்துக்கள் மீது நடக்கும் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்தார், மேலும் மோடி மற்றும் தரும் வலதுசாரி சார்புடையவர்கள். அவர்களின் நட்பு உலகம் அறிந்தது.
இந்த நிலையில் தான் கனடாவிற்கு வரி விதிப்பை விதித்துள்ளார் டொனால்ட் டிரம்ப். இந்தியாவின் நட்புறவை மேம்படுத்தவும் இந்தியாவின் ஆதரவு அமெரிக்காவுக்கு தேவை என்பதாலும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

இந்த வரி விதிப்பு மூலம் அமெரிக்காவில் இருந்து வெளியேறிய உற்பத்தி திட்டங்களும், உற்பத்தித் துறை வேலைவாய்ப்புகளும் திரும்ப அமெரிக்காவுக்கு வரும் என டொனால்டு டிரம்ப் தீவிரமாக நம்புகிறார். இதேபோல் இந்த வரி விதிப்பை அடிப்படையாக வைத்து சீனா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளுடன் வர்த்தக விதிமுறைகளை அமெரிக்காவுக்குச் சாதகமாக மாற்ற முடியும். இந்த வரி விதிப்பால் சீனாவில் இருந்து அடுத்தடுத்து பல நிறுவனங்கள் இந்தியாவுக்குப் படையெடுக்கும் காரணத்தால் டிரம்ப், தனது வரி விதிப்பு பட்டியலில் இந்தியாவை நீக்கிவிட்டார் . கடந்த டிரம்ப் ஆட்சிக் காலத்தில் வரி விதிப்பாலும், கொள்கை மாற்றத்தாலும் அதிகம் பாதிக்கப்பட்டது மெக்சிகோ, சீனா, கனடா தான்.

ஏற்கனவே கனடா நாட்டில் மிக மோசமான சூழல் நிலவுகிறது என்பது குறித்த ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. அங்குக் குழந்தைகள் சாப்பிட வேண்டும் என்பதற்காகப் பெற்றோர் உணவு சாப்பிடாமல் இருக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக இருப்பதாக ஷாக் ரிப்போர்ட் கூறுகிறது.மேலும் கனடா இப்போது வரலாற்றில் இல்லாத மிக மோசமான நிலையில் தள்ளப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்தியா ஏற்கனவே கனடா மீது பொருளாதார தடை நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அமெரிக்கா தற்போது இறக்குமதி வரி விதிப்பை அதிகரித்துள்ளதால் கனடாவின் நிலைமை ரொம்ப மோசமாகும்.பிரதமர் மோடி. வெளியுறவு த்துறை அமைச்சர் ஜெய்ஷ்ங்கர் போன்றோரின் ராஜதந்திரமாகவே பார்க்கப்படுகிறது.

Exit mobile version