அதிரடியில் மோடியின் புதிய இந்தியா! அடங்கிய கம்யூனிஸ்ட் சீனா! லடாக் எல்லை விவகாரத்தில் பேசி தீர்த்து கொள்ளலாம் சீனா !

லடாக் எல்லையிலும் உத்ரகாண்ட் எல்லையிலும் தொடர்ந்து வாலாட்டுகின்றது சீனா, பொதுவாக குளிர்காலங்களில் படைகுறைப்பு செய்யும் அந்த நாடு இம்முறை குளிர்காலத்துக்கு முன் ஏதோ செய்ய திட்டமிடுகின்றது.

சீனா எனும் கம்யூனிச தேசத்துக்கு நேரம் சுத்தமாக சரியில்லை. அந்த நாட்டின் நிரந்தர அதிபர் என ஜின்பெங்கை நிறுத்தினார்கள், ஜின்பெங்கின் ஆட்சியில் சீனா வேகமாக சரிகின்றது
ஜின்பெங்கின் திட்டமான “ஒன் பெல்ட் ஒன் ரோடு” என பெரும்பாலான நாடுகளை சீனாவோடு இணைக்கும் சாலை திட்டம் மிகபெரிய படுதோல்வியில் தொங்கி கொண்டிருக்கின்றது.

பல நாடுகள் அதில் இருந்து விலகிவிட்டன, சீனாவின் கடன் கொள்கையும் வட்டி கொள்கையும் இன்னும் பலவும் ஏற்று கொள்ள முடியாதவை என்பதும் நிஜம் சீனாவின் வெளியுறவு கொள்கைகள் மிக அபாயமானவை, உலகிலே தன்னை சுற்றியுள்ள எல்லா நாடுகளிலும் வம்பிழுத்து வைத்திருக்கும் ஒரே நாடு சீனா.

அமெரிக்காவுடன் முறுகல் இன்னும் ஒரு மாதிரியான முரட்டு போக்கு, ரஷ்யாவுடனும் முறுகல் என உலகில் இருந்து தனித்து நிற்கும் அந்த நாட்டின் பொருளாதாரம் வேகமாக சரிகின்றது

தென் சீன கடலில் எத்தனையோ “கடும்” எச்சரிக்கைகளை அந்நாடு செய்தாலும் அமெரிக்கா பிரிட்டனின் அதிரடிகள் தொடர்கின்றன, இன்னும் ஒரு அமெரிக்க கப்பலை கூட தொட்டுபார்க்க சீனாவால் முடியவில்லை, முடிவதும் சுலபமல்ல‌

சீனாவின் நட்பு அல்லது அடிமை நாடுகளெல்லாம் இப்பொழுது விலகுகின்றன, பிலிப்பைன்ஸ், நேபாளம் என ஒவ்வொரு நாடும் விலகுகின்றது, இலங்கை மீள நேரம் பார்க்கின்றது, மியன்மரில் சீனாவுக்கு எதிரான மக்கள் மனநிலை துப்பாக்கிதூக்கும் அளவு சென்றாயிற்று

உலகமே திரண்டு சீனாவினை சாத்த தொடங்கியிருக்கும் நிலையில் ஒரு நாட்டை கண்டு சீனா மிகவும் அஞ்சுகின்றது அந்த நாடு இந்தியாஅமெரிக்காவுக்கு அடுத்து தனக்கு மிரட்டலான பெரும் நாடாக இந்தியாவினை நோக்குகின்றது சைனா, இந்தியாவின் மக்கள் தொகையும் வளங்களும் சீனாவின் இடத்தை இந்தியா பிடிக்க எளிதானவை

இந்தியாவின் ராணுவம் உள்ளிட்ட சகலதுறை வளர்ச்சி, உலகநாடுகளிடையே இந்தியாவுக்கு கிடைத்துள்ள நற்பெயர் இவை எல்லாம் சீனாவுக்கு கடும் கோபமான விஷயங்கள் சீனாவில் இருந்து வெளியேறும் கம்பெனிகள் இந்தியாவில் குடியேறி தொழில்தொடங்குவதால் இந்திய பொருளாதாரம் உயர்வதும் சீன பொருளாதாரம் சரிவதும் அவர்களுக்கு எரிச்சல்

அடுத்து தென் சீனகடலில் குவாட் அமைப்பிலும் இன்னும் பிரான்ஸ் ஏற்படுத்தும் அடுத்த அமைப்பிலும் இந்தியா சீனாவுக்கு எதிராக இருப்பது கூடுதல் கோபம் எல்லாம் சேர்த்துத்தான் இந்தியாவோடு ஒரு உரசலுக்கு தயாராகின்றார்கள், இந்தியாவுடன் மோத பாகிஸ்தான் வலுவற்ற நிலையில் இருப்பதும் ஒரு காரணம், சீனாவே களத்துக்கு வருகின்றது.

உள்நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி, கம்யூனிச பீடம் ஜின்பெங்கினை பார்க்கும் மோசமான பார்வை இவற்றை மாற்றவும் இந்தியா தென் சீனகடலில் தங்களுக்கு இடைஞ்சல் தர கூடாது அமெரிக்க பிரான்ஸ் அணியில் சேர கூடாது என மிரட்டவும் சில கணக்குகளை இடுகின்றது,

சீனாஎதிரி நம்மை நோக்கி புன்னகைத்தால் நாம் வீழ்ந்து கிடக்கின்றோம் என பொருள், எதிரி ஆத்திரத்தில் கத்தி தூக்கினால்தான் நாம் வளர்கின்றோம் என்பது பொருள் காங்கிரஸ் காலம் போல இந்தியா இல்லாதது , மன்மோகன்சிங் காலம் போல இல்லாதது சீனாவுக்கு பெரும் அதிர்ச்சி.

மோடியின் இந்தியா இன்னும் சில வருடங்களில் ஆசியாவினை கட்டுபடுத்தும் நாடு எனும் நிலைக்கு செல்லும் எனும் அளவு எதிர்பார்ப்பு உருவாகியிருப்பதை, தங்களின் ஆசிய தாதா பட்டம் பறிபோவதை அவர்களால் நினைத்து பார்க்க முடியவில்லை.

“தென் சீன கடலுக்கு வராதே” என்பதில் தொடங்கி “உலக நாட்டு கம்பெனிகளே இந்தியாவுக்கு சென்றால் அவ்வளவுதான், அங்கு பாதுகாப்பில்லை” என்ற சூழலை உருவாக்கவும் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க சீனா படைகளை குவிக்கின்றது.

ஆனால் இது மோடியின் பலமான இந்தியா அல்லவா? “உன்னால முடிஞ்சத பாத்த்துக்கல” என சவால்விட்டு எல்லையில் காவலை பன்மடங்காக அதிகரித்து நவீன ராணுவ சாதனங்களை நிறுத்தியிருக்கின்றது
நிச்சயம் சீனா தாக்காது, காரணம் இங்கே தொட்டால் அந்நாட்டுக்கு எங்கெல்லாம் யாரால் அடிவிழும் என்பது அவர்களுக்கு தெரியும்.

இதனால் இந்தியாவினை பேச்சுவார்த்தைக்கு இழுக்க ஏதோ செய்கின்றார்கள், இந்தியா அதன் போக்கில் மிக தைரியமாக எல்லையில் சீனாவுக்கு அதன் ராணுவ மொழியில் பதில் சொல்ல தயாராய் நிற்கின்றது

வலது சாரி சிந்தனையாளர் : ஸ்டான்லி ராஜன்

Exit mobile version