நரேந்திரமோதி‍ தற்போது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நெருக்கடியை சமாளித்துக் கொண்டிருக்கிறார்.

இதுவரை இந்திய சரித்திரத்திலேயே இது போன்ற ஒரு நெருக்கடி எந்த பிரதமருக்கும் ஏற்பட்டதே கிடையாது. ஒரு குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு சீரியஸ் என்றாலே சில நாட்களில் குடும்பமே நிலைகுலைந்து போய்விடும். தற்போது மோதிஜியைப் பொருத்தவரை அவர் குடும்பத்தில் உள்ள 130 கோடி மக்களும் மிகப் பெரிய ஆபத்தில் இருக்கிறார்கள்.

சிலர், இதற்கு வெகு நாட்கள் முன்பாகவே லாக்டவுன் அனௌன்ஸ் செய்திருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். சிலர், ஆர்மியை உடனடியாக அழைக்க வேண்டும் என்கிறார்கள். சிலர் இதில் பெரிய அளவு இண்டெலிஜென்ஸ் பெயிலியூர் உள்ளது என்று குறை பாடுகிறார்கள். மேலும் சிலர் மோதிஜி முஸ்லீம்களை திருப்திப்படுத்த முனைவதாகப் பழி போடுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஒபீனியன் உள்ளது. ஆனால் ஒருவருக்கும் தன் வீட்டுப் பிரச்னையை சமாளிக்கக் கூட தெம்போ திராணியோ கிடையாது. அட்வைஸ் மட்டும் பிரதமருக்கு வாரி வழங்குவார்கள்.

இந்த லாக்டௌன் வெற்றியடையவில்லை என்றால் அப்போதும் அனைவரும் தங்களின் சுட்டு விரலை காட்டப்போவது பிரதமரை நோக்கிதான். ஒருவேளை வெற்றியடைந்தால் அப்போதும் பழி முழுவதும் பிரதமருக்குதான். ஆனால் காரணம் பொருளாதாரம் வீழ்ந்துவிட்டதென்று. ஒருவேளை லாக்டௌன் அறிவிக்காமல் பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் அப்போதும் பொறுப்பில்லாத பிரதமர் என்று வசைபாடுவார்கள். எப்படி இருந்தாலும் பெறுப்பில்லாமல் வாய் காதுவரை கிழிபவர்கள் குறை பாடப் போவது பிரதமரைப் பார்த்துதான்.

130 கோடி மக்கள் வாழும் தேசத்தில் வேலைகளை நிறுத்தச் சொல்லிவிட்டார் பிரதமர். வேலையில்லாததால் ஏழைகளுக்கு அடுத்தவேளை உணவு இல்லை. பணக்காரர்களுக்கு சம்பாத்தியம் குறைந்துவிட்டது. வீட்டிலேயே பிரதமர் முடக்கிப் போட்டுவிட்டார் என்று கோவம். அவர்களின் வாழ்க்கையில் பொழுது போக்கே இல்லாமல் செய்துவிட்டார் மோதிஜி. மத்தியதர வர்கத்தினர் எங்களைப் பற்றி எப்போது கவலைப் பட்டிருக்கிறார் பிரதமர் இப்போது கவலைப்பட என்று புலம்பல். எங்கும் புலம்பல் எவரிடமும் புலம்பல்.

ஒரு 70 வயது கிழவர் 130 கோடி மக்களின் பாரத்தையும் எதிர்பார்ப்பையும் சுமந்து கொண்டு எந்தவிதமான முகச் சுளிப்பையும் காட்டாமல், தன்னை எந்த பொறுப்பிலிருந்தும் விலக்கிக் கொள்ளாமல், எந்த வெசவைப் பற்றியும் கவலைப்படாமல், எதற்கும் சாக்கு போக்கு சொல்லாமல் இருக்கிறார்.

ஆம்.. இவையனைத்தும் அவர் ஒருவர் மட்டும்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

இவை எல்லாவற்றையும்தாண்டி, ஒரே ஒரு குறிக்கோளுடன் ஒரேஒரு இலக்குடன் இயங்குகிறார். அதுதான் இந்த தேசநலன். இதுவரை நம்முடைய சரித்திரத்திலேயே இல்லாத புது சரித்திரம் இது. இதுவரை ஒருமுறைகூட தன்னைப் புகழ்ந்து பேசும்படி யாரிடமும் கேட்டதில்லை அவர். ஒவ்வொன்றாக தேசத்தின் முக்கியமான பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார் அவர். தற்போது அதில் புதிதாக சேர்ந்திருப்பது யாருமே எதிர்பார்க்காத இந்த கொரோனா தொற்று நோய்.

இப்போதும்கூட நம்மையெல்லாம் தயவு செய்து வீட்டிலேயே இருங்கள். உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று முதலில் பேசிவிட்டு இரண்டாம்முறை பேசும்போது.. உங்களையெல்லாம் கஷ்டத்திற்கு உள்ளாக்கி விட்டேன். மன்னித்துவிடுங்கள் என்று மக்களிடம் பொது மன்னிப்பு கேட்கிறார்.

இவரிடமா குறை கண்டு பிடிக்கிறீர்கள்..? இவரையா விளம்பரத்திற்கு அலைகிறவர் என்று நாக்கூசாமல் பேசுகிறீர்கள்..? தனியார் அமைப்பினர் செய்த அழிச்சாட்டியங்கள் பற்றி ஒரு வார்த்தை பேசாதவரைப் பார்த்தா மேடைக்கும், பெயருக்கும், புகழுக்கும், ஆசைப்பட்டு கம்யூனிஸ்டுகளோடும் காங்கிரஸுடனும் சேர்ந்து கொண்டு வெசவாய் வைது தள்ளுகிறீர்கள்..?

நாக்கு அழுகிவிடும் இவரைத் தூற்றினால்..!

தெய்வமாக நமக்கு அனுப்பி வைத்த வாராது வந்த மாமணி நம் பிரதமர்..!

கட்டுரை :- பாஜக நிர்வாகி எம.எஸ்.பாலாஜி

Exit mobile version