செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வேண்டுமா? ஜாமீன் வேண்டுமா? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அமைச்சர்செந்தில் பாலாஜி முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் வரும் திங்கட்கிழமை வரை அவகாசம் கொடுத்துள்ளது.அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில், ஜாமீன் வழங்கியபோது அமைச்சராக பதவி ஏற்க அனுமதி வழங்கவில்லை என உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வரும் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் இருந்தார். அப்போது அவர் மீது பண மோசடி புகார்கள் எழுந்தன. போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்குகளின் அடிப்படையில் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த 2023 ஆம் ஆண்டு கைது செய்த அமலாக்கத்துறை அவரை சிறையில் அடைத்தது.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்றங்களில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்தார். ஆனால், அவரது ஜாமீன் மனு தொடர்ந்து நிராகரிக்கப்பட்டுக் கொண்டே இருந்த நிலையில், அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஜாமீனில் வெளிவந்த செந்தில் பாலாஜி மீண்டும் தமிழ்நாடு அமைச்சரவையில் இடம் பெற்றார்.மேலும் முதல்வர் ஸ்டாலின் அவருக்கு தியாகி பட்டம் கொடுத்தார். இந்நிலையில், அவரது ஜாமீனை ரத்து செய்யக் கோரி அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனு தொடர்ந்தது. இந்த மனு மீதான விசாரணை தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த மனு மீதான விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜாமீன் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், ஜாமீன் வழங்கியபோது அமைச்சராக பதவி ஏற்க அனுமதி வழங்கவில்லை எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் விளக்கம் தெரிவித்துள்ளனர்.
அதற்கு நீதிபதிகள், செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வேண்டுமா அல்லது ஜாமீன் வேண்டுமா என்று கேள்வி எழுப்பினர். மேலும், அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சியங்களை கலைக்க மாட்டார் என எப்படி கூற முடியும் என்றும் கேட்டனர். மேலும், மெரிட் அடிப்படையில் ஜாமீன் வழங்கவில்லை. அரசியலமைப்புப் பிரிவு 21ஐ மீறியதால் ஜாமீன் அளித்தோம் என்று தெரிவித்தனர். ஜாமீன் வழங்கும்போது அமைச்சராக பதவி ஏற்க அனுமதி வழங்கவில்லை எனவும் நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.
மேலும், செந்தில்பாலாஜி அமைச்சராக இல்லை என சிறப்பு மனு தாக்கல் செய்து ஜாமீன் பெற்றீர்கள். ஆனால் பிறகு அமைச்சராக்கி கொண்டீர்கள் அமைச்சராக இருந்த போது செந்தில்பாலாஜி தவறு செய்தார் என்பது தான் வழக்கு. இந்த நிலையில் அவர் எப்படி மீண்டும் அமைச்சர் ஆனார்?உச்ச நீதிமன்றம் அளித்த ஜாமீன் என்பது சாட்சியங்களை கலைக்க கொடுக்கப்பட்ட லைசென்ஸ் இல்ல. அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி சாட்சிகளை கூண்டிற்கு கூட வரவிடாமல் தடுக்கிறார் என் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் காட்டமாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து, சாட்சியங்களை கலைப்பார் என அச்சம் இருந்தால் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றலாம் என்று செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை வைத்த நிலையில், அதனை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். மேலும், வழக்கு விசாரணையை 28ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அமைச்சர் பதவியா அல்லது ஜாமீனா என்பது குறித்து அன்றைய தினம் தெரிவிக்க செந்தில் பாலாஜி தரப்புக்கு அறிவுறுத்தி உள்ளனர்.மேலும், வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது. அந்தக் கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்துள்ளனர்.
