பாகிஸ்தான்,சீனாவுக்கு எதிராக அஜித்தோவல் தலைமையில் 8 நாட்டு மீட்டிங்! அடுத்து காத்திருக்கும் சம்பவம் !!

பிரதமர் நரேந்திர மோடி 7 நாடுகளின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்களை (நவ.10) சந்தித்திருக்கிறார்.

பேச்சுவார்த்தை முடிந்தவுடன், ஈரான் , ரஷியா மத்திய ஆசிய நாடுகளான தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ,  ஆகியவற்றின் பாதுகாப்பு பிரதிநிதிகள் பிரதமரைச் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது,  ஒரு உள்ளடக்கிய அரசாங்கத்தின் தேவையையும், ஆப்கானிஸ்தான் மண்ணை பயங்கரவாத குழுக்களால் பயன்படுத்துவதைப் பற்றி பூஜ்ஜிய சகிப்புத்தன்மை நிலைப்பாடு, எதிர்ப்பதற்கான உத்தி , ஆப்கானிஸ்தானில் இருந்து போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் பற்றி ஆப்கானிஸ்தானின் நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய அம்சங்களாக இதை மோடி வலியுறுத்தினார். 

மேலும் பிராந்திய பாதுகாப்பு , மத்திய ஆசியாவின் முற்போக்கான கலாச்சார மரபுகளை புதுப்பிக்கவும், தீவிரவாத போக்குகளை எதிர்க்கவும் செயல்படும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.இந்த ஏழு நாடுகளின் பாதுகாப்புப் பிரதிநிதிகள், உரையாடலை ஒழுங்கமைப்பதில் இந்தியாவின் முன்முயற்சி மற்றும் பரிமாற்றங்களின் தரம் ஆகியவற்றைப் பாராட்டினர். ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்த அந்தந்த நாடுகளின் நிலைப்பாடுகளையும் அவர்கள் தெரிவித்தனர்.

கோவிட் தொற்றுநோயால் முன்வைக்கப்பட்ட சவால்களை மீறி டெல்லி பாதுகாப்பு உரையாடலில் மூத்த பிரமுகர்கள் பங்கேற்றதையும் மோடி பாராட்டினார்.ஆப்கானிஸ்தானின் நிலப்பரப்பை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக் கூடாது என டெல்லியின் பிராந்திய பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்ற 8 நாடுகளும் கூட்டாக புதன்கிழமை அறிவித்தன.

டெல்லியில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாட்டில் ஆப்கானின் அண்டை நாடுகளைச் சேர்ந்த இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளின் பிரதிநிதிகள் சார்பில் வெளியிட்ட கூட்டறிக்கையிலும் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தை பாகிஸ்தானும் சீனாவும் புறக்கணித்துள்ளன. ஆப்கான் விவகாரத்தில் மிகவும் தீவிரமான மனிதநேயப் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்ட நிலையில் கூட்டத்தைப் புறக்கணித்த பாகிஸ்தானுக்கு ஆப்கான் மக்கள் மீது உள்ள அலட்சியத்தைத்தான் இந்தப் புறக்கணிப்பு பிரதிபிலிக்கிறது என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசியதாவது., இந்த ஆலோசனை கூட்டம் நடத்துவது இந்தியாவுக்கு கிடைத்த பாக்கியம். ஆப்கானிஸ்தானின் வளர்ச்சியை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஆப்கானிஸ்தான் வளர்ச்சி அந்த நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல், அண்டை நாடுகளுக்கும் பிராந்தியத்திற்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த ஆலோசனை, பிராந்திய நாடுகளிடையே ஒத்துழைப்புக்கான நேரம். ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவுவதற்கும், மேம்படுத்துவதற்கும் அல்லது கூட்டுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் எங்கள் ஆலோசனைகள் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version