பாஸ்போர்ட் சேவை மையங்கள் மூடப்படும்

கொரோனோ வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள சூழலில், அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க, சென்னை பாஸ்போர்ட் அலுவலகம் (அனைத்து பாஸ்போர்ட் சேவை மையங்கள், அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் உள்பட) 2020 மார்ச் 31-ம்தேதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. சென்னை அண்ணா சாலை ராயலா டவர்சில் இயங்கும் பாஸ்போர்ட் அலுவலகத்திலும் தட்கல் கவுண்டர் மற்றும் விசாரணை கவுண்டர்களும் மூடப்படுகின்றன.

இதனைக் கருத்தில் கொண்டு ,பின்வரும் ஆலோசனைகளை அலுவலகம் வழங்கியுள்ளது.

  1. பாஸ்போர்ட் சேவை மையங்கள், அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம், தட்கல் மையங்களுக்கு வருமாறு ஏற்கனவே அழைப்பு பெற்றவர்கள், தங்களது வருகையை மார்ச் 31-ம் தேதிக்குப் பின்னர் மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
  2. வருகையை மாற்றியமைக்க கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது. இயல்பு நிலை திரும்பும்வரை, எத்தனை முறை  வேண்டுமானாலும் , வருகையை மாற்றிக்கொள்ளலாம்.
  3. ராயலா டவர்ஸ் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வரவேண்டிய விண்ணப்பதாரர்களும், தங்கள் வருகையை மார்ச் 31-க்குப் பின்னர் வேறு எந்த தேதிக்காவது தள்ளிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
  4. இதுபற்றிய அனைத்து விவரங்களுக்கும் மக்கள் 044- 28513639, 044-28513640 ஆகிய எண்களையோ அல்லது rpo.chennai@mea.sov.in என்ற இணையதளத்திற்கோ தொடர்பு கொள்ளலாம்.

இதனால் ஏற்படும் சிரமத்திற்கு வருந்துவதாக, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி திரு. அசோக் பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version