மோடியின் நேரடி தொடர்பில் உள்ள ஐ.ஏ.எஸ்.அதிகாரிக்கு முக்கிய பதவி வழங்கிய ஸ்டாலின்! டெல்லியின் நேரடி கண்காணிப்பில் சென்னை?

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் கன மழை பெய்தது.குறிப்பாக சென்னையில் இரண்டு நாட்களாக மழை கொட்டி தீர்த்தது. சென்னை சென்ட்ரல், புரசைவாக்கம், அண்ணாநகர், சைதாப்பேட்டை மாம்பலம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை பெய்ததால் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மேலும் சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஓட்டி செல்கிறார்கள். கடந்த வாரம் சாலையில் உள்ள குழியால் நிலை தடுமாறி அருகே சென்ற அரசுப்பேருந்து மோதி உயிரிழந்தார்.முகமது யூனஸ் என்ற 32 வயதே ஆன மென்பொறியாளர் அரசு பேருந்தில் மோதி சக்கரத்தில் சிக்கி பரிதாப உயிரிழந்தார். திருவொற்றியூரில் மின்சாரம் பாய்ந்து 11வயது சிறுமி உயிரிழந்தார் உயிரிழந்தார்.

ஆட்சி மாற்றத்திற்கு பிறகு சென்னை கால்வாய்கள் ஒழுங்காக பராமரிக்கப்படவில்லை.மேலும் தற்போது முதல்வராக இருக்கும் ஸ்டாலின் அவர்கள் மேயராக இருந்தார் துணை முதல்வர் உள்ளாட்சி துறை அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர், ஆனால் சென்னையை தத்தளிக்க விட்டு விட்டார். என்று பொதுமக்களே குற்றம் சாட்ட ஆரம்பித்துள்ளார்கள். அவர் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் கொளத்தூர் தொகுதி இந்த மழையால் மூழ்கியது.

இந்த நிலையில் பிரதமர் மோடி சென்னை மழை குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் உரையாடி சேதங்களை கேட்டுள்ளார். அதன் பின் மத்திய அரசிடமிருந்து சென்னைக்கு அளிக்கப்பட்ட நிதிகள் குறித்த பைல்கள் பிரதமர் மோடியின் டேபிளுக்கு சென்றுள்ளது. இவ்வளவு நிதி வழங்கியும் சென்னையை ஏன் மிதக்கிறது. கொடுக்கும் நிதி எங்கே போகிறது என டெல்லியிலிருந்து தமிழக தலைமைச்செயலகத்துக்கு போன் கால்கள் பறந்துள்ளது .

உடனடியாக ஸ்டாலின் சென்னைக்கு நிரந்தர தீர்வு காண 14 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்திருக்கிறார். இதில் ஒரு ஆச்சர்யம் காத்திருக்கிறது இந்த குழுவானது ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் இயங்குகிறது. யார் இந்த திருப்புகழ் என்று யோசிப்பவர்களுக்கு இறையன்பு என்ற பெயரை சொன்னதும் டக்கென்று ஞாபகம் வரும்.

திருப்புகழ் ஐஏஸ், தமிழகத்தின் தலைமை செயலாளரான இறையன்புவின் அண்ணன். இவர் தான் இப்போது 14 பேர் கொண்ட குழுவின் தலைவர். திருப்புகழ் அவ்வளவு எளிதாக கடந்துபோய்விடக் கூடிய அதிகாரி அல்ல என்பது அவரை பணிகளை உற்று பார்ப்பவர்களுக்கு நன்றாக தெரியும். 2005ம் ஆண்டு குஜராத்தில் மோடி முதலமைச்சராக இருந்த காலகட்டம். அப்போது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோகராக அமர்த்தப்பட்டவர் திருப்புகழ். பேரிடர் மேலாண்மை துறையில் நெடிய அனுபவம் கொண்டவர் திருப்புகழ். குஜராத் பூகம்ப பாதிப்புகளின் போது சபாஷ் என்று மோடி கூறும் அளவுக்கு சிறப்பு கவனம் பெற்றவர்.

அப்போது தான் நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்ப பாதிப்புகளை அறிய இந்தியாவால் அவர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டார். அனைத்து பணிகளையும் ஜெயமாக்கி அவர் நாடு திரும்ப…2017ம் ஆண்டு தேசிய பேரிடம் மேலாண்மை துறை கொள்கை மற்றும் திட்ட ஆலோகராக அமர வைக்கப்பட்டார்.

பிரதமர் மோடியின் குட்புக்கில் இப்போதும் இருக்கும் திருப்புகழ் தான் தற்போது சென்னையில் மழைநீர் நிரந்தரமாக தேங்க கூடாது என்ற நோக்கத்துடன் அமைக்கப்பட்டு உள்ள 14 பேர் கொண்ட குழுவுக்கு தலைமை வகிக்கிறார். இது டெல்லியிலிருந்து கொடுக்கப்பட்ட உத்தரவு என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் மோடியின் நேரடி தொடர்பில் இருப்பவருக்கு முக்கிய பதவி அளிக்கப்பட்டுள்ளது திமுக கூட்டணி கட்சிகளை அதிர வைத்துள்ளது.

இந்த குழுவானது ஆராய்ந்து அறிக்கை அளிக்கும். அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு பரிசீலிக்கும். பிரதமர் நேரடி தொடர்பில் இருப்பவரின் தம்பி இறையன்பு தமிழக தலைமை செயலாளர் ஆக உள்ளார், இவர் வல்லுநர் குழுவின் தலைவராக இருக்கிறார் என்று பேச்சுகள் எழுந்தன. தமிழக அரசின் முக்கிய செயல்பாடுகள் இனி மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் தான் இருக்கும் போல…

Exit mobile version