பிரதமர் மோடி தலைமையிலான அரசு சிறு மற்றும் குறுவிவசாயிகளின் நலனுக்கான புதிய பாசன திட்டங்கள்.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ஜல் சக்தி மற்றும் உணவு பதப்படுத்துதல் அமைச்சர் திரு பிரகலாத் சிங் பட்டேல் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

விளை நிலத்தை தண்ணீர் சென்றடைவதை மேம்படுத்தவும், விளைச்சல் பகுதியை விரிவாக்கவும், தண்ணீர் சிறப்பாக பயன்படுத்தப்படுவதை மேம்படுத்தவும், நீடித்த தண்ணீர் பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தவும் பிரதமரின் கிரிஷி சிஞ்சயீ திட்டம் 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

மேம்படுத்தப்பட்ட பாசன பலன்கள் திட்டம், ஹர் கேத் கோ பானி, ஒவ்வொரு துளிக்கும் அதிக பயிர் மற்றும் நீர்நிலை மேம்பாடு உள்ளிட்ட திட்டங்கள் இதன் கீழ் செயல்படுத்தப்படுகின்றன.

மேம்படுத்தப்பட்ட பாசன பலன்கள் திட்டத்திற்கு 2016-17-ம் ஆண்டு ரூ 3,307.88 கோடியும், 2017-18-ம் ஆண்டு ரூ 3,593.61 கோடியும், 2018-19-ம் ஆண்டு ரூ 2,849.07 கோடியும், 2019-20-ம் ஆண்டு ரூ 1,738.76 கோடியும், 2020-21-ம் ஆண்டு ரூ 1,510.04 கோடியும் மத்திய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஹர் கேத் கோ பானி திட்டத்திற்கு 2016-17-ம் ஆண்டு ரூ 1,001.91 கோடியும், 2017-18-ம் ஆண்டு ரூ 1,678. 13 கோடியும், 2018-19-ம் ஆண்டு ரூ 1,343.23 கோடியும், 2019-20-ம் ஆண்டு ரூ 1,217.97 கோடியும், 2020-21-ம் ஆண்டு ரூ 976.53 கோடியும் மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட நிலையில் 2021-22-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடு ரூ 899 கோடியாக உள்ளது.

ஒவ்வொரு துளிக்கும் அதிக பயிர் திட்டத்திற்கு 2016-17-ம் ஆண்டு ரூ 1,991.24 கோடியும், 2017-18-ம் ஆண்டு ரூ 2,819.49 கோடியும், 2018-19-ம் ஆண்டு ரூ 2,918.38 கோடியும், 2019-20-ம் ஆண்டு ரூ 2,700.01 கோடியும், 2020-21-ம் ஆண்டு ரூ 2562.18 கோடியும் மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட நிலையில் 2021-22-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடு ரூ 4,000 கோடியாக உள்ளது.

நீர்நிலை மேம்பாடு திட்டத்திற்கு 2016-17-ம் ஆண்டு ரூ 1,471.72 கோடியும், 2017-18-ம் ஆண்டு ரூ 1,691.81 கோடியும், 2018-19-ம் ஆண்டு ரூ 1,780.55 கோடியும், 2019-20-ம் ஆண்டு ரூ 1,472.33 கோடியும், 2020-21-ம் ஆண்டு ரூ 990.23 கோடியும் மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட நிலையில் 2021-22-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடு ரூ 2,000 கோடியாக உள்ளது.

தூய்மையான கங்கைக்கான தேசிய திட்டத்தின் கீழ் 2014-15-ம் ஆண்டு ரூ 170.99 கோடியும், 2015-16-ம் ஆண்டு ரூ 602.60 கோடியும், 2016-17-ம் ஆண்டு ரூ 1,062.81 கோடியும், 2017-18-ம் ஆண்டு ரூ 1,625.01 கோடியும், 2018-19-ம் ஆண்டு ரூ 2,626.54 கோடியும், 2019-20-ம் ஆண்டு ரூ 2,673.09 கோடியும், 2020-21-ம் அண்டு ரூ 1,339.97 கோடியும் 2021-22-ம் ஆண்டில் 2021 ஜூன் 30 வரை ரூ 147.45 கோடியும் என மொத்தம் ரூ 10,248.46 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், தில்லி, ஹிமாச்சலப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் இதர இடங்களில் மொத்தம் 346 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, ரூ 11498.76 கோடி செலவிடப்பட்டு, 158 திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

ஆறுகளை தூய்மைப்படுத்துவதற்காகவும், மாசை தடுப்பதற்காகவும் கங்கைக்கு நமாமி கங்கே திட்டமும், இதர நதிகளுக்கு தேசிய ஆறுகள் பாதுகாப்பு திட்டமும் செயல்படுத்தப்படுகின்றன.

தேசிய ஆறுகள் பாதுகாப்பு திட்டத்திற்கு 2018-19-ம் ஆண்டு ரூ 150.50 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ 150.32 கோடி வழங்கப்பட்டது. 2019-20-ம் ஆண்டு ரூ 196 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ 136.66 கோடி வழங்கப்பட்டது. 2020-21-ம் ஆண்டு ரூ 100 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ 99.87 கோடி வழங்கப்பட்டது.

நமாமி கங்கே திட்டத்திற்கு 2018-19-ம் ஆண்டு ரூ 2370 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ 2626.54 கோடி வழங்கப்பட்டது. 2019-20-ம் ஆண்டு ரூ 1553.44 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ 2673.09 கோடி வழங்கப்பட்டது. 2020-21-ம் ஆண்டு ரூ 1300 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ 1339.97 கோடி வழங்கப்பட்டது.

எந்தவொரு தனிநபரும் அவரது வீட்டில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை நிறுவ மத்திய அரசு நிதியுதவி அளிப்பதில்லை. ஆனால், மழைநீர் சேகரிப்பை ஊக்கப்படுத்துவதற்கும், நாடு முழுவதும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்குவதற்கும், ‘ஜல் சக்தி இயக்கம் – மழைநீரை பிடியுங்கள்’ எனும் பிரச்சாரத்தை ஜல் சக்தி அமைச்சகம் தொடங்கியுள்ளது.

2021 மார்ச் 22 அன்று மாண்புமிகு பிரதமரால் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் தண்ணீரை சேமித்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தப்படுகிறது.

நாட்டின் ஊரகப்பகுதிகளின் வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்காக பாரத் நிர்மான் திட்டத்தை 2005 முதல் 2014 வரை இந்திய அரசு செயல்படுத்தியது.

நீண்டகால பாசன திட்டங்களை நிறைவு செய்தல், நீர் மேலாண்மை, குறு பாசன, நீர் நிலைகளின் பழுதுபார்த்தல், புனரமைத்தல் மற்றும் மறு சீரமைப்பு உள்ளிட்டவற்றுக்காக பிரதமரின் கிரிஷி சிஞ்சயீ திட்டம் 2015-16-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

மழைநீர் சேகரிப்பை ஊக்கப்படுத்துவதற்கும், நாடு முழுவதும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்குவதற்கும், ‘ஜல் சக்தி இயக்கம் – மழைநீரை பிடியுங்கள்’ எனும் பிரச்சாரத்தை ஜல் சக்தி அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.

2021 மார்ச் 22 அன்று மாண்புமிகு பிரதமரால் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் தண்ணீரை சேமித்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தப்படுகிறது.

அடல் ஜல், பிரதமரின் கிரிஷி சிஞ்சயீ திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம், நீர்நிலை வளர்ச்சி மேலாண்மை, அம்ருத், யுபிபிஎல், எம்பிபிஎல், யூஆர்டிபிஎஃப்ஐ வழிகாட்டுதல்கள் 2014, தேசிய நீர் கொள்கை 2012 ஆகிய பல்வேறு திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை இந்திய அரசு செயல்படுத்தி/எடுத்து வருகிறது.

ஆறுகளை தூய்மைப்படுத்துதல் ஒரு தொடர் நடவடிக்கை ஆகும். இந்த முயற்சிகளில் மாநிலங்களின் நடவடிக்கைகளுக்கு ஜல் சக்தி அமைச்சகம் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.

நமாமி கங்கே திட்டத்தின் கீழ், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுடன் இணைந்து கங்கை நதியின் நீர் தரத்தை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து வருகிறது.

யமுனா நதியை பொருத்தவரை, ரூ 4355 கோடி மதிப்பிலான 24 திட்டங்களுக்கு நமாமி கங்கே திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.

தண்ணீர் தரவுகளை எளிதில் அணுகக்கூடியவையாக, வெளிப்படைத்தன்மை மிக்கவையாக மற்றும் துல்லியமானவையாக ஆக்குவதற்கு தேவையான முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

https://jalshakti-dowr.gov.in எனும் தளத்தில் நீர்வளத்துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் தொடர்ந்து பதிவேற்றப்படுகின்றன.

தண்ணீர் தரவுகள் மற்றும் அவை சார்ந்த விஷயங்களுக்கான மத்திய தகவல் களஞ்சியமாக தேசிய நீர் தகவலியல் மையத்தை 2018 மார்ச் 28 அன்று இந்திய அரசு நிறுவியது. https://nwic.gov.in எனும் முகவரியில் அனைத்து தகவல்களும் கிடைக்கும்.

மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுடன் இணைந்து ஆறுகளின் நீர் தரத்தை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து வருகிறது. தேசிய நீர் தர கண்காணிப்பு திட்டத்தின் மூலம் இது செய்யப்படுகிறது.

2018 செப்டம்பரில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கையின் படி, 23 ஆறுகளில் 351 மாசடைந்த பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆறுகளில் ஏற்படும் மாசுகளைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் வழியாக செல்லும் இந்திரா காந்தி கால்வாய், குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

ராஜஸ்தான் அரசின் சுகாதார பொறியியல் துறையின் படி, தண்ணீரின் தரம் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், இந்திரா காந்தி கால்வாயின் தண்ணீரில் ஆபத்து விளைவிக்கக்கூடிய ரசாயணங்கள் எதுவும் இல்லை.

Exit mobile version