உலகமுன்னோடி நிறுவன தலைமை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு.

ஃபர்ஸ்ட் சோலார் தலைமை செயல் அதிகாரி மார்க் விட்மரை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார். 

இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை, குறிப்பாக சூரிய சக்தி சாத்தியக்கூறுகள் மற்றும் 2030-க்குள் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களில் இருந்து 450 ஜிகாவாட் மின்சார உற்பத்தியை எட்டுவதற்கான நமது இலக்கு குறித்து அவர்கள் பேசினர்.

சமீபத்தில் தொடங்கப்பட்ட உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனத்தின் பிரத்தியேக மெல்லிய சுருள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் தயாரிப்பு வசதிகளை நிறுவுவது குறித்தும் சர்வதேச விநியோக சங்கிலிகளில் இந்தியாவை இணைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அடோப் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சாந்தனு நாராயணை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். 

இந்தியாவுடனான அடோப் நிறுவனத்தின் தற்போதைய கூட்டு மற்றும் எதிர்கால முதலீட்டு திட்டங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.

இந்தியாவின் முன்னணி திட்டமான டிஜிட்டல் இந்தியா மற்றும் சுகாதாரம், கல்வி மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகிய துறைகளில் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களை பயன்படுத்துவது குறித்தும் அவர்கள் ஆலோசித்தனர்.

குவால்காம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிறிஸ்டியானோ அமோனை பிரதமர் நரேந்திரமோடி சந்தித்தார். 

இந்தியாவின் தொலைதொடர்பு மற்றும் மின்னணு துறையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து சந்திப்பின் போது இருவரும் விவாதித்தனர். மின்னணு அமைப்புகளின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்புக்கு சமீபத்தில் தொடங்கப்பட்ட உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் மற்றும் இந்திய செமி கண்டக்டர் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் விவாதித்தனர்.

உள்ளூர் புதுமைகள் சூழலியலை இந்தியாவில் கட்டமைப்பதற்கான உத்திகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version