இந்த ஆண்டு முதல் கூடுதலாக 1,408 தமிழக மாணவர்களை, மருத்துவர்கள் ஆக்குகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

திரு.நரேந்திர மோடி அவர்கள், பிரதமர் ஆவதற்கு முன்பு தமிழகத்தில் 24 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன.

அதாவது கடந்த 70 ஆண்டுகளில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகள் மொத்தம் எண்ணிக்கை 24. ஆனால் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் மட்டும், மிகக் குறுகிய காலத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை தமிழகத்திற்கு வாரி வழங்கியுள்ளார்.

ராமநாதபுரம், விருதுநகா், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூா், நீலகிரி, திருவள்ளூா், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூா், கள்ளக்குறிச்சி ஆகிய 11 இடங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகின்றன.இந்த 11 மருத்துவ கல்லூரிகள் மூலம் தமிழகத்திற்கு கூடுதலாக 1,408 எம்பிபிஎஸ் இடங்கள் இந்த ஆண்டு முதல் கிடைக்க உள்ளன.

ஏற்கனவே தமிழகத்தில் உள்ள 3,350 எம்பிபிஎஸ் இடங்களுடன், பிரதமர் மோடி வழங்கியுள்ள 1,408 இடங்களையும் சேர்த்து மொத்தம் 4,758 எம்பிபிஎஸ் இடங்கள் இந்த ஆண்டு முதல் கிடைக்கின்றன.இதில் 85 சதவீத இடங்களான 4,044 இடங்களை தமிழக மாணவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தயவால் இந்த ஆண்டு முதல் கூடுதலாக 1,408 தமிழக மாணவர்கள் மருத்துவர்கள் ஆகும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.இதுதவிர, பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்திற்கு வழங்கியுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணி மதுரை அருகே தோப்பூரில் நடைபெற்று வருகிறது.

தமிழையும், தமிழர்களையும் வைத்து பிழைப்பு நடத்த வில்லை பிரதமர் திரு.நரேந்திர மோடி. அவர் தமிழர்களுக்காக தொடர்ந்து நல்லதை மட்டுமே செய்து வருகிறார்.

Exit mobile version